போகர் சப்தகாண்டம் 1721 - 1725 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1721 - 1725 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1721. வணங்கிட்டே போதையிலே சித்தரெல்லாம் வாகாக வோடிவந்து யென்னைச்சூழ்ந்தார்
பிணங்கிட்ட யெந்தனையும் ரிஷிகள்பார்த்து பிரியமுடன் ஓடிவந்து யின்னுஞ்சொல்வார்
தணங்கிட்ட யெந்தனுக்கு சொன்னதென்றால் தயவுடனே போகரிஷி சொல்லக்கேளும்
சுணங்கிட்டு கண்ணபிரான் மண்டபத்தில் துறைகோடி ரிஷிமுனிவர் போனார்காணே

விளக்கவுரை :


1722. காணோமே யிதுநெடுநாள் சித்தர்தம்மை காத்திருந்தோம் நெடுநாளாய் நதியோரத்தில்
நாணவே தேவாதி ரிஷிகளெல்லாம் நலமுடனே யன்றாடம் வருவார்போவார்  
வேணவே வுபசாரம் நடக்குமிங்கே விசையுடனே மண்டபத்தில் போனாரில்லை
ஆனவே யும்முடைய விறுமாப்பாலே ஆக்கினையைதான் கடந்து வந்திட்டீரே

விளக்கவுரை :

[ads-post]

1723. வந்ததினா லுந்தனுக்கு சாபமப்பா வரைகோடி யுகவருஷம் தந்தோம்காணும்
தொந்தமுடன் தான்கொடுத்தார் சித்தரெல்லாம் தொல்லுலகில் போவதற்குயிடமுமில்லை
சந்தமுடன் கிருஷ்ணமண்டபத்தினோரம் சாங்கமுடன் தானிருந்தேன் சிலகாலந்தான்
கந்தமுடன் பெண்களெல்லாம் நதியோரத்தில் கலந்துமே ஜலக்ரீடை செய்யவந்தார்தாமே

விளக்கவுரை :


1724. தாமேதா னெந்தனையும் கண்டாரப்பா சதகோடி சூரியர்போல் கண்டேன்யானும்
காமேதான் பெண்களெல்லாம் கிட்டிவந்தார் கண்டாரே யெந்தனையும் பெண்களெல்லாம்
வேமேதா னெந்தனையும் யாரென்றார்கள் மிக்கவுமே தான்பணிந்து யடிவணங்கி
நாமேதா னிவ்வூரு தேசமல்ல நலமுடனே சீனபதி யென்றிட்டேனே

விளக்கவுரை :


1725. என்றவுடன் பெண்களெல்லாம் அதிசயித்து ஏற்றமுள்ள சிறுபாலா யேன்தான்வந்தீர்
கன்றுடனே பசுநீங்கும் கதையைப்போல பாங்கியர்க்கு பரிதாபமெடுத்துச் சொன்னேன்
நன்றுடனே காலாங்கி சீஷணம்மா நாட்டிலுள்ள வளமெல்லாங் காணவந்தேன்
தென்திசையில் நானிருந்து குளிகைபூண்டு சிறப்பான சீனபதிபோனேன்தானே   

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar