போகர் சப்தகாண்டம் 1716 - 1720 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1716 - 1720 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1716. ஆமேதான் சித்தருட வளமுங்கண்டேன் அதற்கப்பாலவருடைய வுளவுங்கண்டேன்
தாமேதான் தவநிலையி னுறுதிகண்டேன் சாங்கமுடன் வயதல்லோலக் கோயிலில்லை
போமேதான் குளிகையது பூண்டுகொண்டு பொங்கமுடன் தவநிலையில் எதிரில்நின்றேன்
வேமேதான் சித்தர்களுமென்னைக்கண்டு வெகுவெகுவாய் மாறாட்டம் செய்தார்பாரே

விளக்கவுரை :


1717. செய்யவே வடியேனும் குலைநடுங்கி திடுக்கிட்டு மெய்மறந்து யேங்கிநின்றேன்
பையவே எந்தனையாரென்றுகேட்க பட்சமுடன் காலாங்கி தனைநினைத்து
மெய்யுடனே என்பேரு போகரென்றேன் மெய்ச்சியே எனக்குபதேசஞ்செய்தார்
வலமையுடனே லலாடமதில் பூண்டுகொண்டு மகத்தான கண்ணபிரான் தனைக்கண்டேனே

விளக்கவுரை :

[ads-post]

1718. கண்டேனே கண்ணபிரா னருகில்வந்தேன் கனமுடனே யவர்பாதம் போற்றிசெய்தேன்
தொண்டனெனு மடியேனும் தாள்பணிந்து துரைராஜர் முன்பாக நிற்கும்போது
தெண்டமுடன் மண்டபத்தினருகேதான் தீவிரமாய்ப் போய்வரலாமோ சித்தாவென்றார்
பெண்டுகள் தாமிருக்குமிடம் தெரியாதோ பேரான போகரிஷி சாபந்தானே

விளக்கவுரை :


1719. சாபமது சொன்னவுட னடியேன்தானும் சாங்கமுடன் கண்ணபிரான் தன்னைநோக்கி
வேகமுடன் காலாங்கிதனைநினைத்து விகற்பமதுயெந்தனுக்கு நேர்ந்ததென்று
சாகமுட னடியேனும் சாபம்நீக்கி தாரிணியில் பிழைப்பதற்கு கெதிதானென்ன
பாகமுடன் கண்ணபிரான் மனமுவந்து பட்சம்வைத்து யெந்தனுக்கு மொழிசொன்னாரே

விளக்கவுரை :


1720. சொன்னாரே கண்ணபிரான் மனமுவந்து சுட்டெரிக்க போகரையுமனதிலெண்ணி
நன்னயமாய் குளிகைகொண்ட போகர்தன்னை நயமுடனே தாமுரைப்பார் தீதமெத்த
பன்னகசாலையிலிருக்கும் பாங்கியாரைப் பார்ததினா லுந்தனுக்கு கெடுதியாச்சு
வன்னயமா யெந்தனையு மெடுத்துக்கூற வாகுடனே மறுபடியும் வணங்கிட்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar