போகர் சப்தகாண்டம் 1711 - 1715 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1711 - 1715 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1711. தானான காயத்தை நிறுத்தவேண்டும் சதாகாலம் சுக்கிலத்தை கட்டவேண்டும்
வேனான மும்மலத்தை யறுக்கவேண்டும் வெளியான சிதாபாசம் நீக்கவேண்டும்
பானான முச்சுடரை யறுக்கவேண்டும் பாழான தூலமதை வெறுக்கவேண்டும்
மானான பராபரியை நிர்த்தஞ்செய்து மானிலத்தில் வாழ்பவனே சித்தனாமே

விளக்கவுரை :


1712. சித்தனுங் காலாங்கிநாதர்பாதம் சிறப்புடனே போகரிஷியடிபணிந்து
சத்தமுடன் மேருவுக்கு இடபாகத்தில் சுடரொளிபோல் மடுவொன்று நதியொன்றுண்டு
முத்தமுன் மண்டபமுஞ்சுனையுங்கண்டேன் முலான மண்டபத்தினருகே சென்றேன்
கர்த்தனென்னும் கண்ணபிரான் மாளிகண்டேன் கதிரொளிபோ நவரத்தின கசிதந்தானே

விளக்கவுரை :

[ads-post]

1713. கசிதமா மண்டபத்தி னடியோரந்தான் கதிரோனை கண்மறைக்கும் சித்தரப்பா
நிசிதமுடன் தவநிலையில் வணங்கிநிற்பார் நீடூழிகால வரைகண்டதில்லை
உசிதமுடன் கண்ணபிரானானவர்க்கு வுற்பனமாங் குளிகையது மிகவேயீவார்
றுசிதமுடன் குளிகையது பூண்டுகொண்டு துரைராஜர் சதாநித்தம் கலவிசெய்வார்

விளக்கவுரை :


1714. செய்வாரே பன்னிரண்டாயிரந்தான் சிறப்பான தேவதாபெண்கள்தானும்
உய்குவா ரெட்டெட்டு கலவியோடு வுற்பனமாம் நிசிதகளை யார்செய்வார்பார்
மொய்குழல் மார்தானிருக்கும் பளிங்குமாடம் மும்மணியாம் தேவரிட வாசீர்மந்தான்
நெய்தலுடன் கொட்டியவர் தாமரைபோல் நேரான தடாகமது கண்டேன்பாரே

விளக்கவுரை :


1715. பாரேதான் தடாகத்தில் கோடிசித்தர் பாங்கான யாதவத்தின் சித்தராகும்
நேரேதான் தடாகத்தில் கீழ்பாகத்தில் நெடிதான சித்தரகளோ குறும்பராகும்
சேரேதான் தடாகத்தின் மேற்பாகத்தில் சிறப்பான சித்தர்களோ மூலவர்க்கம்
ஊரேதான் தடாகத்தின் குணபாகத்தில் வுத்தமனே கன்னடியர் சித்தராமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar