போகர் சப்தகாண்டம் 1706 - 1710 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1706 - 1710 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1706. தேடையிலே போகரிஷி சொன்னமார்க்கம் தெளிவாக யாருந்தான் சொல்லாரப்பா
நீடையிலே வாசனத்துக்குறுதிசொல்வேன் நெடிதான மான்தோலாசனந்தானாகும்
ஆடையிலே காவிகஷாயமாகும் அப்பனே அடிவேட்டி முழந்தானாலு
முழங்கால்மட்டும் முக்கியமாய் தானணிதல் முறைமையாமே

விளக்கவுரை :


1707. முறைமையாய் தானிருந்து யோகவெட்டி முடிமீதுதானணிந்து யோகஞ்செய்வாய்
நிறைமையாய் கைகாலை முடக்கவேண்டும் நித்தியமும் வாசிதனை நடத்தவேண்டும்
திறைமையாய் வட்சரத்தை மாறவேண்டும் தீர்க்கமுடன் சின்மயத்திலேறவேண்டும்
வறைமையாய் சூட்சாதிவாராதாரம் வகுப்புடனே யறிந்தவனே யோகியாமே

விளக்கவுரை :

[ads-post]

1708. யோகியா மின்னமொரு மார்க்கங்கேளு நொடிதான சித்ராபர்வமுன்னே
ஆகியே பூமிவயந்தன்னைபார்த்து அப்பனே யளர்பூமி யாராய்ந்தேதான் 
பாகியே ஓராளிணாழமட்டும் பாங்குடனே யளர்களத்தை யாராய்ந்தேதான்
மாகியே கிட்டனைகள் மிகவுஞ்செய்து மார்க்கமுடன் பன்னாடை மேலேசாத்தே

விளக்கவுரை :


1709. சாத்தவே மூன்றுநாள் சென்றபின்பு சாங்கமுடன் தான்சென்று பார்க்கும்போது
ஏத்தமுள வளர்போல யிருக்கும்பாரு என்மகனே வாரியதை பீங்கானிட்டு
தூத்தமுடன் பனிநீரால் கரைத்துமேதான் தோராமல் சத்துமுறை தெளிவிறுத்தி
மாத்தமே மறுசட்டிக்குள்ளே வார்த்தஉ மயங்காமல் பத்துமுறை காச்சுகாச்சே

விளக்கவுரை :


1710. காய்ச்சவே வுப்பதுவும் மிகவேபூர்க்கும் கருவான வுப்பதுவுங் காரமெத்த
மாய்ச்சலுடன் சரக்குக் கடுங்காலனாகும் மகத்தான வேதையிது கோடிக்கொவ்வும்
தீய்ச்சலுடன் வுப்புக்குத் தீட்சைசெய்து திறமுடனே காயத்துக் குறுதிபண்ணு
பாய்ச்சலுடன் முப்பூவுந் தின்றாயானால் பாங்குடனே தேகமது இறுகுந்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar