1701. ஆச்சப்பா
பூநீறுயெடுக்குமார்க்கம் அப்பனே வதிசொல்வேன் மதியாய்கேளு
பேச்சப்பா சித்தருட
சாத்திரத்தில் பிரட்டான கைமறைப்பு வதீதமெத்த
காச்சவே பூநீரை
யெடுக்கும்சைகை கருவாகச் சொல்லவில்லை சாத்திரத்தில்
பாச்சலுடன் காலாங்கி
வையர்பாதம் கருணையுடன் தாள்பணிந்து உறுகுவேனே
விளக்கவுரை :
1702. கூறுவேன் பங்குனியாம்
பருவந்தன்னில் குறிப்புடனே நாதாக்கள் சொன்னமார்க்கம்
மாறுபடு பேதனங்கள்
கண்டாராய்ந்து மதிதலத்தில் பூநீறு காய்க்குங்காலம்
வேறுடனே ராக்காலஞ்
சாமத்திலிப்பமுடன் காட்டகத்தே சென்றுமேதான்
சாறுடனே காடெல்லாம்
திரிந்துபார்த்தால் சதிரான பூநீறு பூர்க்குந்தானே
விளக்கவுரை :
[ads-post]
1703. பூர்க்குமே பூநீறு
கதிர்போலாகும் பொங்கமுடன் தானெழும்பி மலர்போல்வீழும்
நிர்க்குமே
விடியநற்சாமந்தன்னில் நிலையாது பூநீறு காரம்போச்சு
தீர்க்கமுடன்
காரமதுயில்லாவிட்டாலும் தெளிவான பூநீரைவாரிவந்து
மார்க்கமுடன் தான்கரைத்து
தெளிவிறுத்தி மயங்காமல் தீட்சையது பத்துசெப்பே
விளக்கவுரை :
1704. செய்யவே யின்னமொரு வயணங்கேளு
செழிப்பான சித்திரையாம் பருவகாலம்
பையவே பூரணையாம்
பட்சந்தன்னில் பாங்கான நடுச்சாம வேளைபார்த்து
மெய்யவே
பூநீறுவிளையுமார்க்கம் மேன்மையுடன் கண்டறிந்துயெடுக்கும்போது
தொய்யவே தேவதையின்
பூசைவேண்டும் தோராமல் வட்சரத்தை மாறிக்கொள்ளே
விளக்கவுரை :
1705. கொள்ளவே தீட்சைவிதி
மார்க்கந்தன்னை குறிப்பாகத் தான்செய்துமுடிப்பாயானால்
எள்ளளவுங் கோளாறுநேராதப்பா
என்மகனே குருமுடிக்கும் வகையைத்தேடு
விள்ளவே பூமியுட
வளமுஞ்சொன்னேன் விருப்பமுடன் நாதாக்கள் துறையுஞ்சொன்னேன்
மெள்ளவே யெந்நூலேழாயிரந்தான்
மேன்மையுடன் கண்டறிந்து யோகந்தேடே
விளக்கவுரை :

