போகர் சப்தகாண்டம் 1696 - 1700 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1696 - 1700 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1696. மாடான சண்டிகளை விட்டுநீங்கி மார்க்கமுடன் குளிகைகொண்டு பார்க்கவந்தேன்
காடான வனாந்திரங்கள் குகைகள்கண்டேன் கனமான சித்தரிட மார்க்கம்பார்த்தேன்
கோடான கோடிமுறையாவும் பார்த்தேன் குறிப்புடனே பொன்னகரம் கண்டுவந்தேன்
சேடான பகவானால் சொல்லலாகா சிறப்பான பொன்னகரங் கண்டேன்தானே

விளக்கவுரை :


1697. கண்டேன் சதாசிவத்தின் கோயில்கண்டேன் கைலங்கிரிவாசரை யான்கண்டதில்லை
தொண்டுசெயும் ரிஷிமுனிவர் பாதங்கண்டேன் தோராத வர்ச்சனைகள் யாவும்பார்த்தேன்
அண்டரண்டசராசரங்க ளிதற்கீடல்ல ஆதிசேடன் தன்னாலுங் காணலாகா
தெண்டமுடன் மேற்புரம் வாசல்வந்தேன் தேவரிஷிமுனியென்றொருவர் கண்டேன்தானே

விளக்கவுரை :

[ads-post]

1698. முனியான ரிஷிசித்தர் யானுங்கண்டேன் மூலஸ்தானப் பெருமை கோயில்கண்டேன்
கனியான வடவாசல் சேர்வைகண்டேன் தாக்கான பொன்கோபுர வாசல்கண்டேன்
தொனியான வாத்தியங்கள் வழங்கக்கண்டேன் தோரான கண்ணபிரா னூஞ்சல்கண்டேன்
இனியான தடாகங்கள் படிகளெல்லாம் இயலான தங்கமது வர்ணமாமே

விளக்கவுரை :


1699. ஆமேதான் வண்ணங்க ளெல்லாம்பார்த்தேன் அதற்கப்பால் பூமியிட நாதங்கண்டேன்
தாமேதா னின்னகரம் பூநீரப்பா தாக்கான சித்தர்களும் கண்டமார்க்கம்
போமேதான் முந்நூறு காதந்தானும் பொலிவான பூநீறுவிளையும்பூமி
தாமேதான் கண்டுவந்தேன் பூநீர்தன்னை நாட்டிலே கண்டவர்களில்லைதாமே

விளக்கவுரை :


1700. தானேதான் கண்டமட்டும் குளிகைகொண்டேன் தயவுடனே மாணாக்கள் பிழைக்கவென்று
நானேதான் சித்தர்முனி சொன்னநூலை நலமுடனே யாராய்ந்து வளமுங்கண்டு
மானேதான் தேர்ந்தெடுத்தேன் இந்ததேசம் மகத்தான தேசங்களிதற்கீடல்ல
பானேதான் முன்சொன்ன தேசமெல்லாம் பாங்கான பூநீறுக்காதியாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar