போகர் சப்தகாண்டம் 1691 - 1695 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1691 - 1695 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1691. கண்டேனே வன்னகரஞ் சிலதுகாலம் கவனமுடன் குளிகையது பூண்டுகொண்டு
அண்டரண்ட முடையதொரு கோபுரத்தில் அப்பனேயான்சென்று பார்த்தபோது
திண்டமுட னவ்விடத்தில் ரிஷிகளப்பா தேவாதிகோஷ்டமுடன் தியானஞ்செய்வார்
தெண்டமுட னானவரைக்கண்டபோது திடுக்கிட்டு மனங்கலங்கி தியங்கிட்டேனே

விளக்கவுரை :


1692. தியங்கிட்டு வடியேனும் காலாங்கிதன்னைத் தியக்கமுடன் தானினைத்துவிழித்து பார்த்தேன்
மயங்கிட்ட யெந்தனையும் ரிஷிகள்பார்த்து மனமிறங்கி தீரமுடன் வதீதஞ்சொன்னார்
தயங்கிட்ட யெந்தனையும் யாரென்றுகேட்க தாழ்மையுடன் சிரங்குவித்து வணக்கஞ் சொன்னேன்
நயங்கிட்டு வடியேனும் குளிகைபூண்டு நாட்டமுடன் பூவிளையும் தேசம்வந்தேன்

விளக்கவுரை :

[ads-post]

1693. வந்தேனே பூமிவளங்காண வந்தேன் வளமையுடன் நாதாக்களெடுக்கும் ஸ்தானம்
சந்தேகமில்லா தவனந்தானாடு சார்புடனே மலைகுகைகள் யாவுங்கண்டேன் 
தொந்தமுடன் நதிகரைகள் யமுனையாவும் தோறாமல் குளிகைகொண்டு சுத்திப்பார்த்தேன்
எந்தனிட தைரியங்கள் மிகவுமாகி யேகினேன் பொன்னகரங் காணத்தானே

விளக்கவுரை :


1694. காணயிலே தேவஸ்தான பெருமைகண்டேன் கைலங்கரி வாசல்களிதற்கீடல்ல
வேணவே வதிசயங்க ளெல்லாம்பார்த்தேன் விளைகின்ற பூநீரும் காரமெத்த
தோணவே மானிடர்க ளெடுக்கமாட்டார் தொலைதூர தேசமுந்தொடரமாட்டார்
மாணவே வந்தாலு மாண்டுபோவார் மகிதலத்திலஃ சித்தருட தேசந்தானே

விளக்கவுரை :


1695. தேசத்தை கண்டாலு மாண்டுபோவார் தெரிச்த்தால் சித்தர்களுஞ் சாபஞ்சொல்வார்
பாசத்தை விட்டொழித்து வந்திட்டாலும் பதையாமற் காரத்தால் சாவார்தாமும்
வேஷத்தை போட்டுமல்லோ வீணர்கூடி வெகுவெகுவாய் வளம்பார்ப்பார் கோடிகோடி
கேசத்தை விட்டொழியார் மாய்கையாலே நெடுந்தூரஞ் செல்லார்கள் சண்டிமாடே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar