போகர் சப்தகாண்டம் 1686 - 1690 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1686 - 1690 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1686. சுண்ணமென்ற பூமிதனில் பூநீரப்பா சுருதியுடன் தானெடுத்து மாண்டார்கோடி
அண்ணலென்ற வாவுடையார் கோயிலுண்டு அதன்பக்க மெண்ணாயிரங் காதமப்பா
கண்ணபிரான் தானிருக்கும் கோயிலுண்டு கடுந்தூர மானிடர்கள் செல்லமாட்டார்
தண்ணமுடன் மகாகோடி முனிவர்சித்தர் சதாகால வாசமது வாசமதுசெய்வார்தானே

விளக்கவுரை :


1687. தானான கோயில்குள மதிகங்காணும் தாக்கான மானிடர்கள் காணாதேசம்
பானான வூர்வனவுமில்லாதேசம் புகழான மலைகுகைகள் கண்டோரில்லை
தேனான தேன்விளையுங் கதண்டுக்காடு தெற்கான தேசமது சுள்ளர்நாடு
மானான வழகர்மலை புத்தூராகு மகத்தான வைகைநதி பூமியாமே

விளக்கவுரை :

[ads-post]

1688. ஆமேதானத்திநகராசீர்மந்தான் அயோத்திநக ராற்றோரங்கரைதானாகும்
வேமேதான் விலாடபுரி குகையோரந்தான் வெளிக்காடு பூமியெல்லாம் அளவேயாகும்
நாமேதான் கண்டபடி பின்னஞ்சொல்வேன் நாதாக்கள் தானெடுக்கும் வளமுஞ்சொல்வோம்
போமேதான் பொன்னகர மேருபக்கம் பொலிவான ஸ்தலமுண்டு புகலக்கேளே

விளக்கவுரை :


1689. கேளேதான் ஸ்தலமதுவும் தேவஸ்தானம் கெடியான கோபுரமும் தங்கமாகும்
காளேதான் விக்கினங்கள் தங்கமாகும் கடலான மதிகளெல்லாந் தங்கமாகும்
ஆளேதான் கண்டறியா தேவஸ்தானம் ஆத்தான மண்டபமுந்தங்கமாகும்
மீளேதான் வாகனங்க ளெல்லாந்தங்கம் மேலான பூமியெல்லாந் தங்கமாமே

விளக்கவுரை :


1690. தங்கமாம் தேர்ரதந்தங்கவர்ணம் தனியான பிரதமைகள் தங்கமாகும்
அங்கமாலட்சுமியும் வாசஞ்செய்வாள் அந்நகரங்கண்டவர்களாருமில்லை
புங்கமாஞ் சித்தர்முனி ரிஷிகள்தாமும் பொலிவான கூட்டமெத்த கோயிலுள்ள
சிங்கமுடன் கோபுரமாம் வாசல்தன்னில் சிறப்புடனே காவலது கண்டேன்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar