போகர் சப்தகாண்டம் 1681 - 1685 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1681 - 1685 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1681. காணவே நல்வழிபோகாவிட்டால் கடிந்துரைப்பார்சித்தரெல்லாம் நாள்கடோறும்
மாணவே சாபத்துக்கிடமுண்டாகும் மாற்கமுடன் யாதொன்றுங் காட்டவேண்டாம்
வேணவேசூத்திர சாத்திரங்களெல்லாம் விள்ளாதகைமறைப்பு வுளவுசொல்லி.
நாணவே முப்பூவுக்கு உறவுஞ்சொல்லி நாதாக்கள் தானெடுக்கும் வகையைத்தேடே

விளக்கவுரை :


1682. தேடையிலே பூம்பாறை யானைக்கல்லாம் தேசத்தில் சோழனிட நாடேயாகும்
ஓடையிலே விராலியிட மலைதானாகும் வுத்தமனே திருப்பாண்டி நாடேயாகும்
மேடையிலே நாகார்ச்சுன மலையுமாகும் மேலான நாமக்கல் பாறையாகும்
வாடையிலே சுவாமியிட மலைதானாகும் வளமான சுரசிந்து யோரமாமே 

விளக்கவுரை :

[ads-post]

1683. ஓரமாம் நர்மதாபூமியாகும் உத்தமனே திருமாலி நகரமாகும்
காரமா முகவைபதி கடலோரந்தான் கரியான பூமியிடம் படிக்கல்லாம்
தூரமாம் தாம்பிரபரணி ஸ்தலமுமாகும் தூக்கான வேகவதி தீர்த்தமாகும்
பாரமாம் சித்தூரா மாக்காடாகும் பசுவலையும் நீரெடுக்கப் பதியுமாமே

விளக்கவுரை :


1684. பதியான கங்கைநதிக் கடலோரந்தான் பாங்கான வளர்பூமி தேசம்யாவும்
கதியான வாள்மீகர் பாளந்தன்னில் நயமான யிடப்பாகம் புத்தாருண்டு 
வதியான சித்தர்முனி யிருக்குந்தானம் வினோதவதி யாரொன்று கம்பவொன்று
சதியான மிருகங்க ளிருக்குந்தானம் சதகோடிசூரியர்போல் ரிஷிகள்பாரே  

விளக்கவுரை :


1685. பாரேதான் கல்லானை வாசஞ்செய்யும் பனிமூடும் தேசமது பகரப்போமோ
நேரேதான் சுனையுண்டு மலையிலுண்டு நெடிதான பூமியெல்லா மளவேயாகும்
சீரேதான் பாலைநிலமென்பார் சித்தர் சீர்பாதம்பட்டாலே வெந்துபோகும்
ஊரேதான் பூண்டுமுதலில்லையப்பா வுத்தமனே காரமென்ற பூமியாச்சே   

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar