போகர் சப்தகாண்டம் 1676 - 1680 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1676 - 1680 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1676. ஆமேதான் சித்தர்முனி செய்யும்பாகம் அடவாகப் பலநூலுமாராய்ந்தேதான்
நாமேதான் காலாங்கிநாதர்பாதம் நாட்டமுடன்றாள் பணிந்து நவிலலுற்றேன்
வேலேதான் இக்கருவை வெளியிடாதே விட்டாலே வெகுமோச மாகும்பாரு
நாமேதான் சொல்லுகிறோம் யானைமார்க்கம் நாதாக்கள் பிடிவாதம் நவில்வோம்பாரே

விளக்கவுரை :


1677. பாரேதான் குருவானை சுவாமியானை பராபரியாயிதன்னானை சிவனாரானை
சீரேதான் உமையானை வும்பரானை சிவாலயங்கள் கன்னானை தேவியானை
கூரேதான் குருவானை கணேசனானை குறிப்பான கண்ணனிட வானைகண்டீர்
நேரேதான் சித்தரிட யானைகண்டீர் நெரியான முரிஷிக ளானையாமே

விளக்கவுரை :

[ads-post]

1678. ஆமேதான் ஆணையது கடக்கவேண்டா மப்பனேசாமமது செய்தும்பாரு
நாமேதான் சொல்லுகிறோம் ரிஷிகள்போக்கு நன்மையுட னுபசாரஞ் செய்யவேண்டும்
வேமேதான் மனதுவர நடக்கவேண்டும் வேதாந்ததாயினது வருளேவேண்டும்
போமேதான் கற்பமது கொள்ளவேண்டும் பொலிவான நன்னடக்கை வேண்டுந்தானே

விளக்கவுரை :


1679. தானான ரிஷிகளிட பதாம்புயத்தை சதாகாலம் ரிஷிகள்மேற்றாக்கவேண்டும்
கோனான சாபத்திற் கிடங்கொடாமல் குருநிந்தை யணுகாமலிருக்கவேண்டும்
மானான சித்தர்முனி தங்களுக்கு பட்சமுடன்மனதுவந்து நடக்கவேண்டும்
மானான சாத்திரத்தை யாருக்குந்தான் மானிடரே கொடுத்தாக்கால் தீமையாமே

விளக்கவுரை :


1680. தீமையாந் தலையதுதான்வெடித்துப்போகும்திகழான சாபமதுமேவும்பாரு
சாமையாங்கோபமது வதிகமாகி சண்டாளதுரோகியென்றே சபிப்பார்சித்தர்
வூமையாமூடனென்றபெயர்தானாகும்மூர்க்கமுடன் தானுரைப்பார் வதீதமெத்த
ஆமைபோல் உறுப்பெல்லாந் தானடக்கி அவனியிலே வாழுவது மதீதங்காணே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar