போகர் சப்தகாண்டம் 1671 - 1675 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1671 - 1675 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1671. வகையான வாந்தையுட பிச்சிதானும் வலுவான செம்போத்துப் பிச்சுதானும்
பகையான வல்லூறு பிச்சுதானும் பாங்கான காட்டோனான் பிச்சுதானும்
தகையான வாயசத்தின் பிச்சுதானும் தடிப்பான சாரையுட பிச்சுதானும்
மைகையான காடையுட பிச்சுதானும் மூர்க்கமாங் கருங்குருவி பிச்சுதானே

விளக்கவுரை :


1672. பிச்சான மீன்குத்தி பிச்சுதானும் பேரான தேவாங்கு பிச்சிதானும்
முச்சான கருங்குரங்கு பிச்சுதானும் முயலான நாரையுட பிச்சுதானும்
வச்சான மாடப்புறா பிச்சுதானும் கொடியான பூனையுட பிச்சுதானும்
நச்சான பாப்பரணி பிச்சுதானும் நலமான கருஞ்சாரை பிச்சுமாமே

விளக்கவுரை :

[ads-post]

1673. ஆமேதா னித்தனையு மொன்றாய்க்கூட்டி அப்பனே புனுகுடனே பச்சைப்பூரம்
போமேதான் கோரோசனை குங்குமப்பூ பொலிவான சவ்வாது தானுங்கூட்டி
காமேதான் கஸ்தூரி வாடைதானும் கருவான முதற்றிட்டு சீலைபோடு
காமேதான் வழிஞ்சியிட தயிலத்தாட்டி விருப்பமுடன் பரணிதனில் பதனம்பண்ணே

விளக்கவுரை :


1674. பண்ணவே மையதனையெடுத்துக்கொண்டு பதிவான வுருவுதனை யேற்றியேதான்
திண்ணமுட னாஞ்சினேயர் வுருவைமாட்டி திறமுடனே லட்சமுரு போட்டுக்கொண்டு
வண்ணமுடன் வலாடமதில் மையைத்தீட்டி மயங்கிடவே லோகமெல்லாம் வசியமாவார்
நண்ணமுடன் ராஜாதிராஜர்தாமும் நாட்டிலே சித்தர்களும் வசியமாமே

விளக்கவுரை :


1675. வசியமா மஷ்டசித்து யிதனாலாகும் வளமான மோகனமு மிதனாலாகும்
வசியமான் ஸ்தம்பனமும் இதனாலாகும் வாகான கருவுகளு மிதனாலாகும்
வசியமாம் பேததனமு மிதனாலாகும் மகத்தான கிரியைமுத லிதனாலாகும்
வசியமா முச்சாடன மிதனாலாகும் மார்க்கமுடன் உருமாற்ற மிதனாலாகும்

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar