போகர் சப்தகாண்டம் 1666 - 1670 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1666 - 1670 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1666. தேடவே யின்னமொரு மார்க்கம்பாரு தெளிவான மையொன்று செப்பக்கேளு
நீடயிலே வழுகண்ணி தொழுகண்ணியாகும் நீடான நீர்மேல் நெருப்புமாகும்
கூடயிலே பசலையாங் கருபசளையாகும் குறிப்பான வாள்காட்டி னிலையுமாகும்
வாடையிலே அழுஞ்சியென்ற மூலியாகும் வகுப்பான கருமூலி இருள்மூலியாமே

விளக்கவுரை :


1667. மூலியாமஃ பேய்மிரட்டி முசுட்டையாகு முகிழான கருந்தும்பை விளாத்தியாகும்
வாலிவாம் கருடனிட மூலியாகும் பாங்கான சுருங்குவளை பொன்முசுட்டை
வேலியாங் கருமூலிச்சாற்றுக்கூட்டு வெடிப்பான வாதளையின் பாலுங்கூட்டி
கோலியாங் கழற்சியுட மூலிதானும் குணமான பசிமூலி புன்னையாமே 

விளக்கவுரை :

[ads-post]

1668. புன்னையா மேரண்ட மிரண்டதாகும் பகழான நரிமிரட்டி மூலிதானும்
மன்னையாம் பேய்மூலி திகைப்பூண்டாகு மயமான வாளையுடநூமத்தையாகும்
தொன்னையாங் கடம்பையுடன் முதியார் கூந்தல் தோரான வாள்மிரட்டி மூலிதானும்
பன்னையாங் கருங்காலி காறையாகும் பாங்கான திமிர்க்கேட்டான் மதிப்பூண்டாமே

விளக்கவுரை :


1669. பூண்டான கூத்தனிட குதம்பையாகும் புகழான நன்னாரி மூலிதானும்
தீண்டாத வாடுதின்னாப்பாளைதானும் திறமான கருங்கோவை சிவனார்வேம்பு
கூண்டான மாமல்லி செவ்வல்லிதானும் கொடிதான மையூரின் சிகைதானாகும்
தூண்டான மூலியிட சாறுவாங்கி துறைபோல மையெடுக்கும் வகையைகேளே

விளக்கவுரை :


1670. கேளேநீ சாரெல்லாம் ஒன்றாய்கூட்டி கீர்த்திபெற சிலைதனிலூட்டிமைந்தா
பாரேதான் போகாமல் காயவைத்து பாங்குபெற சீலைதனையுருட்டியேதான்
மீளேதான் அழுஞ்சியிட தயிலத்தாலே மிகமைபெற தானனைத்துக் கொளுத்திப்போடு
கீளேதான் பீங்கான்வை தயிலம்வீழும் கிருபையுடன் தானெடுத்து வகையைக்கேளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar