போகர் சப்தகாண்டம் 1661 - 1665 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1661 - 1665 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1661. பூசவே செம்பென்ற தகட்டில்மைந்தா பகழாக பத்துக்கு வொன்றேயாகும்
காசென்ற துட்டின்மேல் பூசிப்பூசிக் களமாக ரவியில்வைத்து புடத்தைப்போடு
மாசென்ற புடமதுவும் பத்தேயாகும் மகத்தான செம்பதுவு மூறலேயாகும்
பாசென்ற களிப்பதுவு மற்றுப்போய் பளிங்கான தம்பாக்கு நிறம்போலாமே

விளக்கவுரை :


1662. நிறமான செம்பதுவு மொன்றேயாகும் நிறையான வெள்ளியது வொன்றேயாகும்
திறமான தங்கமது வொன்றேயாகும் திடமுடனே மூசையிட்டு வருக்கித்தீரு
பரமான சரக்கதுவு மொன்றாய்ச்சேர்த்து பளபளத்த வர்ணமது காந்திமெத்த
உறமான மாற்றதுவு மெட்டதாகும் உத்தமனே போகரிஷி வுரைத்தவாறே

விளக்கவுரை :

[ads-post]

1663. வாறான பொன்னதுவும் வாறடித்து வளமுடனே பூங்காவி தன்னிற்போட
மாறான மாசியது நீங்கியேதான் மகத்தான பசுமைநிற தங்கமாகும்
காறான கடைத்தங்க மிதுக்கொப்பாமோ கடந்தமுனி சித்தரிஷி செய்யுமார்க்கம்
பாறான காலாங்கி யடிவணங்கி பேருலகில் மாந்தர்காய்ச் செப்புவேனே

விளக்கவுரை :


1664. செப்பினேன் நாதாக்கள் அருமைவித்தை ஜெகத்திலே யாராலுங்கூறப்போமோ
ஒப்பவே மனோன்மணியாள் பாதம்போற்றி ஒழுங்குடனே சிதாபாசந்தன்னைநீக்கி
தப்பவே பூரணத்தை மனதிலுண்ணி சதாகாலம் நிருவானி முன்னதாக
மெப்புடனே பராபரியை முன்னிப்பாக மேதினியில் தவசிருந்து நாளைப்போக்கே

விளக்கவுரை :


1665. போக்கவே துஷ்டருடன் கூடவேண்டாம் பொலிவான யுளவையெல்லாங் காட்டவேண்டாம்
தூக்கமுடன் சோம்பருடன்கூடி துறைமுறைகள் யாதொன்றும் காட்டவேண்டாம்
வாக்கிலுள்ள சித்தர்முனி ரகசியத்தை வளப்பமுடன் விருதாவில் கொட்டவேண்டாம்
நோக்கமுடன் தானிருந்து பொருளாராய்ந்து நொடிக்குள்ளே காயசித்திக் கிடமுந்தேடே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar