போகர் சப்தகாண்டம் 1656 - 1660 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1656 - 1660 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1656. வெளியிட்டேன் கோடியுக வித்தையெல்லாம் வேணபடி யுபதேசஞ்செய்தேன்யானும்
பளியிட்ட யெந்தனுக்கு சாபமில்லை பாருலகில் சித்தர்முனி கைமறைப்பை
நெளியிட்ட வெள்ளையென்ற மனிதருக்கு நேர்புடனே காட்டிவிட்டேன் காரணத்தை
துளியிட்ட தேசமெங்கும் சுற்றிவந்தேன் சூட்சாதி சூட்சமெல்லாம் திறந்திட்டேனே

விளக்கவுரை :


1657. திறந்திட்டேன் வெள்ளையென்ற மனிதர்நீங்கி செப்பவில்லை கருநீலமாந்தருக்கு
குறைந்திட்ட வித்தையெல்லாம் கூறவில்லை கொட்டினால் மோசமதுவாகும்பாரு
முறைந்திட்ட சாஸ்திரங்கள் சாபமெய்தும் மோட்சமென்ற வீடில்லை நரகம்போவார்
வரைந்திட்ட வாக்கியங்கள் பிசகாய்ப்போகும் வாகுடனே போகரிஷி பாடிட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

1658. பாடினே னின்னமொரு கருமானங்கேள் பாருலகில் சித்தர்முனி கூறுமார்க்கம்
நீடியதோர் காந்தமது பலமோவைந்து நேரான வெண்காரம் பலமோவைந்து
தேடியதோர் பூநீரு பலமோவைந்து தெளிவான கெந்தியது பலமோகால்தான்
கூடியதோர் சரக்கெல்லா மொன்றாய்ச் சேர்த்து குமுறவே குழிக்கல்லில் போட்டிடாயே

விளக்கவுரை :


1659. போடவே தேனதுவும் விட்டுமைந்தா பொங்கமுடன் தானரைப்பாய் சாமம்நாலி
நீடவே வச்சிரமாங் குகையில்வைத்து நேர்புடனே சில்லிட்டுச் சீலைசெய்து
கூடவே ரவிதனிலே காயவைத்து குணமாக வுலையில்வைத்து வூதிப்பாரு
வாடவே கஅந்தமது சத்தேயாகும் வளமான சத்தெல்லா மெடுத்துக்கொள்ளே

விளக்கவுரை :


1660. கொள்ளவே காந்தமென்ற சத்துதன்னை குமுறவே மறுபடியும் மூசைக்கேற்றி
விள்ளவே தானுருக்கி யெடுத்துப்பாரு வீரான மணியதுவாய் வுருகிநிற்கும்
மெள்ளவே சத்தெடுத்து கல்வமிட்டு மேன்மைபெற வறுவகை ஜெயநீர்தன்னால்
துள்ளவே தானரைப்பாய் நாலுசாமம் துறையாக தானெடுத்து ரவியிற்பூசே 

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar