போகர் சப்தகாண்டம் 1826 - 1830 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1826 - 1830 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1826. ஆமென்ற வித்தங்கம் அருமையப்பா யாராலுங் கண்டறிவ தெளிமையாகும்
நாமென்ற சூதத்தினாட்டுதன்னை நயமுடனே காரசாரங்களாலே
காமென்ற சத்துருமித்துருகளாலே கருவிகரணாதியின்தன் போக்கறிந்து
வேமென்ற குறுக்குவழி போக்குப்பாதை வெகுதூர மறிந்துமல்லோ சாற்றினோமே

விளக்கவுரை :


1827. போற்றினோ மின்னமொரு கருமானங்கேள் பொங்கமுடன் வீரமென்ற செந்தூரந்தான்
மாற்றமுடன் வில்வத்தின் தயிலத்தாலே மயங்காமல் சுருக்கிடவே கட்டிப்போகும்
கூற்றமுடன் மேற்போக்கு புகல்வோர்கண்டீர் போக்கான சரக்குவகை நிற்கப்பாரும்
தேற்றமுடன் சாரமொன்று துத்தமொன்று தெளிவான சிங்கியொன்று கெவுரியொன்றே

விளக்கவுரை :

[ads-post]

1828. ஒன்றான அயமதுவும் செம்புவொன்று வுத்தமனே பொடிபொடியாய் ராவிக்கொண்டு
பன்றான சரக்குகளும் சரியதாக பண்பாகக் குழிக்கல்லிலிட்டு மைந்தா 
யொன்றாகத் தளவிட்டு மாவதாக்கிப் பொங்கமுடன் காலனென்ற ஜெயநீர்தானும்
தன்றான வறுவகையாஞ் ஜெயநீர்தன்னால் தன்மையுடன் தானரைப்பாய் சாமம்நாலே

விளக்கவுரை :


1829. நாலான ஜெயநீரில் மைந்தாகேளு நலம்பெறவே தானரைப்பாய் மைபோல்தானும்
மாலான செப்பகலும் வொன்றுசெய்து மார்க்கமுட னவ்வகலில் சரக்கைபூசி
வேலான ரவிதனிலே காயப்போடு வெளுமையுடன் காய்ந்தபின்பு விபரங்கேளு
சாலான வகல்தனிலே வீரம்வைத்து சார்புடனே சீலையது வலுவாய்ச்செய்யே

விளக்கவுரை :


1830. செய்துமே ரவிதனிலே காயவைத்து செம்மையுடன் தளவாயாஞ் சட்டிதன்னில்
பெய்துமே வுப்பையரவாசியிட்டு பேரான வீரத்தைநடுவேவைத்து
கைமுறையாய் மேலுமந்த வுப்பைக்கொட்டி கணக்குடனே மேற்சட்டி தன்னைமூடி
மெய்முறையாய் சட்டிக்குச் சீலையப்பா மேன்மையுடன் செய்துமல்லோ ரவியிற்போடே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar