1831. போடவே சீலையது காய்ந்தபின்பு
போற்றமுடன் மனோன்மணியால் கிருபையாலே
நீடவே காலாங்கிதனைநினைந்து
நீடூழிகாலம்வரை யிருப்பதற்கு
கூடவே சித்தர்முனி
ரிஷிகள்பாதங் கும்பிட்டு யடியேனை மிகத்தொழுது
மூடவே வாலுகையா
மேந்திரத்தில் முடிமீதில் தானிருத்தி யெரித்திடாயே
விளக்கவுரை :
1832. எரிக்கையிலே கமலமென்ற
சிறுதீயப்பா யென்மகனே யாறுநாள் யெரிநேரப்பா
கரிகியல்லோ வுப்பெல்லாங்
கறுத்துக்காணும் கனகமென்ற செம்பதுவு மக்கியல்லோ
நொரிக்கியே சரக்குடனே
செம்புசேர்ந்து கொடிதான வீரத்துக் காரமேறி
பரிக்கியே வுட்கொண்டு
காரசாரம் பாங்குடனே யேறியல்லோ சிவக்குந்தானே
விளக்கவுரை :
[ads-post]
1833. தானான செந்தூர மென்னசொல்வேன் தகைமைபெறத் தானெடுத்து சீஷாவிற்றான்
கோனான குருபதத்தை
நணுகியேதான் கொற்றவனே தானெடுத்து வைத்துக்கொண்டு
வேனான வெள்ளிசெம்பில்
நூற்றுக்கொன்று விபரமுடன் தானுருக்கி வூதிப்பாரு
பானான மாற்றதுவும்
யெட்டதங்கும் பசுந்தங்கம் போலிருக்கும் பண்புதானே
விளக்கவுரை :
1834. பண்பான பொன்னதுவும்
பத்துக்கொன்று பான்மைபெறத் தங்கமது வொன்றுசேர்த்து
திண்பான தகடடித்துப்
புடத்தைப்போடு தெளிவான தங்கமது பிறவியாச்சு
வண்பான தங்கமது லோகமெச்சும்
வாய்க்காது கருமிகட்கு வாய்க்குமோசொல்
நண்பான சித்தர்முனி
ரிஷிகட்கப்பா நலமுடனே வணங்கியல்லோ வேதைவாங்கே
விளக்கவுரை :
1835. வாங்கவென்றால் குருமொழியை
மனதிலுன்னி வாகுடனே யவர்வாசல் காத்திருந்து
நூங்காம லவர்பணிக்கு
தொண்டராகி துணையோடு கிட்டிருந்து யேவல்செய்து
தாங்கியே யவர்பாத
மர்ச்சித்தேதான் தாழ்மையுடன் கேள்விக்கு முதல்வனாக
ஏங்கியே யவர்முகத்தின்
முன்னேநின்று யெத்தொழிலுஞ் சோரஅமல் செய்யநன்றே
விளக்கவுரை :