1836. நன்றுடனே
சதாகாலங்காத்திருந்து நலமுடனே முடிவுநாள் வருகுமட்டும்
சென்றல்லோ சமாதியிடம்
சென்றுநீயும் செம்மைபெறத் திருப்பணிகள் மிகவுஞ்செய்து
பன்றுடனே வாய்மொழிக்கு
பதிலுங்கூறாப் பதிவாகப்பாத்திருந்து பேழைபோலே
கொன்றைமலர் தானெடுத்து
வர்ச்சித்தேதான் கோடித்து சிவபதத்தில் போற்றிநில்லே
விளக்கவுரை :
1837. போற்றியே யஞ்சலிகள்
மிகவுஞ்செய்து பொருந்தி மனமெப்போதும் புண்ணாகாமல்
நேற்றியாய் மனதுவர
நடந்துகொண்டு நேர்ப்புடனே சகலகலை யறியவேதான்
கூற்றனெனுங் காலனுக்கு
விடங்கொடாமல் கூர்மையுடன் சித்தர்களை வணங்கிநித்தம்
தோற்றமுடன் சதாகாலம்
ரிஷிகள்தம்மைத் தொழுதுமிகவே பணிந்து வேதைவாங்கே
விளக்கவுரை :
[ads-post]
1838. வேதைகளை வாங்கிநித்தம்
சேர்த்துமென்ன வெகுகோடி வாதவித்தை பாடிவிட்டார்
போதையுடன் பாடிவிட்டார்
என்றுசொல்வார் பூதலத்தில் ரிஷிகோடி மகிமைமெத்த
தீதையிலே சாத்திரங்கள்
தொயாமற்றான் சீர்கெட்டு தலைகெட்டு பாடல்கெட்டு
பாதையிலே போகாமல்
துறையுங்கெட்டு பாழாகச் சுட்டுக்கெட்டா ரனந்தமாமே
விளக்கவுரை :
1839. அனந்தமுடன் வேதைமுகஞ்
செய்வாரப்பா அதினுடைய நுட்பவழி காணாமற்றான்
வனந்தனிலே தான்திரிந்து
மூலிதேடி வாகுடனே கெட்டவர்கள் லக்கோயில்லை
மனந்தனிலே நேர்ந்தமட்டும்
செய்துபார்த்து மார்க்கமுடன் சரக்கதனை மறைத்தாரென்று
எனந்தனிலே
கும்புகும்பலாகக்கூடி யேளிதங்கள் செய்தாரே சண்டிமாடே
விளக்கவுரை :
1840. மாடான மாடுகள்தான்
காணப்போறார் மகத்தான சித்தருட கைமறைப்பை
கோடான
கோடிபொருளிழந்துவிட்டார் குவலயத்தில் வீடுவிட்டு
கேடான திரவியங்கள்
யெல்லாந்தோர்த்து தெருத்திண்ணைப் பரதேசியாகிநின்றார்
கூடான கூடுவிட்டுப்
பாய்வேனென்று கூக்குரலால் பேசியல்லோ பிழைப்பார்தானே
விளக்கவுரை :