போகர் சப்தகாண்டம் 1841 - 1845 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1841 - 1845 of 7000 பாடல்கள்
 
bogar-saptha-kaandam

1841. தானான பிழைப்புக்கு யிடமில்லாமல் தட்டழிந்து கெட்டழிந்து தாறுமாறாய்
கோனான்போலாடுதன்னை தோளிலிட்டு வாடெங்கே யென்றுசொன்ன கதையைப்போல
தேனான சாத்திரத்தின் கருகாணாமல் தேங்கியே கெட்டலைந்தார் கோடாகோடி
ஊனான தேகமது புண்ணுமாகி வுடலழிந்து வுருண்டவர்க ளனேகந்தானே

விளக்கவுரை :


1842. அனேகமுடன் மருந்துவகை செய்குவார்கள் அப்பனே சித்தர்களை நினைக்கமாட்டார்
அனேகவித சாத்திரத்தின் மருந்துசெய்வார் அந்நூலின் சித்தர்களைத் துதிக்கமாட்டார்
அனேகவித நூல்படியே மருந்துசெய்வார் அக்காலஞ்சித்தர்களைத் துதிக்கமாட்டார்
அனேகவித முறைப்படியே மருந்துசெய்து வவரவர்கள் குருபதத்தை நினையார்தானே

விளக்கவுரை :

[ads-post]

1843. நினையாத குருவென்ற நிந்தையாலே நீனிலத்தில் சாபமது சேர்ந்துமேதான்
தினையான மருந்துகள்தான் பலிக்காமற்றான் திசைகெட்டு தடுமாறி தேங்கிநின்றான்
வினைபோல துன்பது மிகவுமாகி மேதினியில் அசுருண்டாய் மாண்டுபோனார்
மனைவிட்டு பொருள்தோற்று மாடுதோற்று மனைவிமுதல் தானிழந்தார் சாபத்தாலே

விளக்கவுரை :


1844. சாபமது வந்துமல்லோ சேருமப்பா சதாகாலஞ்சித்தர்களை வணங்கிநித்தம்
கோபமது வாராமல் வுள்ளடக்கி குவலயத்திலிருந்துகொண்டு வரசனாக
பாபமது விட்டகன்று பூமானாக பாருலகில் வாழுவது தருமமப்பா
தருமமுடன் சதகோடி சூரியர்போல் தாரிணியில் வாழுபவன் சித்தனாமே

விளக்கவுரை :


1845. சித்தனாமென்று சொல்லிமெச்சுவார்பார் ஜெகதலத்தில் யெனைப்போல நீயுமாவாய்
பத்தனாயிருந்துகொண்டு பரமன்தன்னை பட்சமுட னெப்போதும் பாலித்தேதான்
நித்தமுடன் குருபதத்தை போற்றிசெய்து நீடூழிகாலம்வரை யோகஞ்செய்து
முத்திபெற வழியுனக்கு தெரியுங்கண்டீர் முயற்சியுடன் பலநூலும் பாருபாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar