போகர் சப்தகாண்டம் 1846 - 1850 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1846 - 1850 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1846. பார்க்கையிலே சின்மயத்தின் பொருள்கள் தோன்றும் பாகுடனே யவரவர்கள் துறையுங்காணும்
ஏர்க்கையிலே சுடரொளியின் பரிவுதோன்றும் யென்மகனே சூட்சாதி சூட்சங்காணும்
கார்க்கையிலே கருவிகரணாதியெல்லாம் கண்ணுக்கு ஒளியாக காணும்பாரு
சேர்க்கையிலே வஷ்டாங்கங் காணலாகும் ஜெகத்திலே சடாட்சரத்தை மேவிப்பாரே

விளக்கவுரை :


1847. மேவுடனே வாராதாரங்கள் தோன்றும் வெளிக்கப்பால் முப்பாழுங்காணலாகும்  
பாவுடனே சிராமயத்தின் ஜோதிகாணும் பார்க்கையிலே ஜோதியது துலைவாய்த்தோற்றும்
நாவுடனே வுள்மூலம் நடுக்கங் காணும் நடுக்கத்தால் தேகமதுகீழ்போலாம்
தாவுடனே மூலாதாரங்கப்பா தடுமாறிக்காணல்போல் தோற்றமாமே

விளக்கவுரை :

[ads-post]

1848. தோற்றமாம் சிகாரத்தின் மகாரமிஞ்சும் தொகுப்புடனே மகாரத்தின் வகாரமிஞ்சும்
கூற்றவாம் யகாரத்தில் வகாரமிஞ்சும் குறிப்புடனே வகாரத்தில் லகாரமிஞ்சும்
தோற்றமாம் லகாரத்தில் ரகாரமிஞ்சும் சேர்ந்தவுடன் ரகாரத்தில் ழகாரமிஞ்சும்
யேற்றமாம் ழகாரத்தில் னகாரமிஞ்சும் யெளிதல்லோ சிவயோகிக் கெளிதிதானே

விளக்கவுரை :


1849. எளிதான வின்னமொரு மார்க்கம்பாரு ஏற்றமுள்ள வெடியுப்பு நாலாங்காய்ச்சல்
நெளிதான சேதுதான் வொன்றேயாகும் நேர்த்தியாய் புளியுடனே காரமாகும்
ஒளிவான தலையண்டம் பேரண்டந்தான் வுத்தமனே சேரிரண்டு தூளதாக்கி
வளிவான சட்டிதனில் கீழேபோட்டு வளமாக வெடியுப்பை நடுவேவையே 

விளக்கவுரை :


1850. வைக்கவே மேலுமந்த மாவைக்கொட்டி வகையாக மேல்மூடி சீலைசெய்து
மெய்க்கவே ரவிதனிலே காயவைத்து மேன்மைபெற வாலுகையில் யெரிப்பாய்தானும்
பொய்க்கவே நாற்சாம மெரித்தபோது போக்கான வுப்பதுவும் கட்டிநிற்கும்
மொய்க்கமே சட்டிதனை திறந்துபாரு மோசமில்லை கட்டியது வுருக்கிப்போச்சே 

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar