போகர் சப்தகாண்டம் 1851 - 1855 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1851 - 1855 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1851. போச்சென்று விடுகாதே புண்ணியாகேள் போக்கான வெடியுப்பு வதீதமெத்த
நீச்சென்ற பேரண்டந்தன்னால்தானும் நிலையாகமதியுப்புக் கட்டலாச்சு
மாச்சென்ற வுப்பாலே சகலசித்து மார்க்கமுட னாடலாங் கோடிவித்தை
பாச்சலுடன் துரைத்தனத்தார்க் கேற்றவுப்பு பாருலகில் ராஜர்வெல்லு முப்புமாச்சே

விளக்கவுரை :


1852. உப்பான வுப்பிதுதான் வீரமெத்த வுலகிலுள்ள வாதிகட்குகந்த வுப்பு  
அப்பான ஜலமதிலே வளர்ந்தவுப்பு அதிலிருந்து பிறந்துமல்லோ வெடியுப்பாச்சு
செப்பான செம்புகளிம்பூரல் போக்குந் தேசத்தில் சிறந்ததொரு வுப்புமாச்சு
ஒப்பான வுப்பிதுக்கு வொன்றுமொவ்வா வுத்தமனே இதுவோடும் வழியைக்கேளே

விளக்கவுரை :

[ads-post]

1853. கேளேதான் வுப்பதுவுங் கட்டிநின்றால் கெடியான வுப்பதுவு மெடுத்துமைந்தா
மாளவே நாகமொரு பலமேதூக்கு மகத்தான சூதமொரு பலமேதூக்கு
சூளவே வீரமொரு பலமேதூக்கு சுத்தமுள்ள சாரமது பலமேதூக்கு  
மீளவே நாகரசமொன்றாய்ச் சேர்த்து மிகப்படவே தானுருக்கி சாய்த்திடாயே

விளக்கவுரை :


1854. சாய்த்திடவே சரக்கெல்லா மொன்றாய்ச்சேர்த்து சாங்கமுடன் தானரைப்பாய்நாலுசாமம்
மாயவே காரசாரத்தினாலே மாண்டுமே ஜெயநீருமாகும்பாரு
தோயவே ஜெயநீரை மதிப்புக்கு தொகுப்புடனே சுருக்குமிடக் கட்டிப்போகும்
காயவே வுப்புக்கு கவசங்கேளு கவான வன்னமென்ற பேதியாமே

விளக்கவுரை :


1855. பேதியாம் வளையலென்ற வுப்புமாகும் பேதமில்லை எடைசரியாய் எடுத்துக்கொண்டு
வாதியா மறுவகை ஜெயநீர்தன்னால் மாட்டடா வெணசாமரை பூத்தபோது
ஜோதியா மெழுகதவும் சொல்லப்போமோ சூட்சமுடன் வுப்புக்குக் கவசஞ்செய்து
மேதியாங் கொம்பதனை சீவிமைந்தா மேன்மைபெற பொடியாக்கி செப்பக்கேளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar