1856. செப்பவென்றா
லறுவகைஜெயநீர்தன்னால் செழிப்புடனே தானரைப்பாய் நாலுசாமம்
ஒப்பமுடன் தானரைத்துக்
கவசஞ்செய்து வுத்தமனே ரவிதனிலே காயவைத்து சீலைசெய்து
தப்பறவே சட்டிதனில்
மணலைக்கொட்டி சட்டமுடன் நடுமையம் வைத்துமைந்தா
மெப்புடனே மேலுமந்த
மணலைகொட்டி மேன்னைபெற சட்டிகொண்டு சீலைசெய்யே
விளக்கவுரை :
1857. சீலையுடன் ரவிதனிலே காயவைத்து சீர்பெறவே வாலுகையி லடுப்பிலேற்றி
காலையுடன் தானெரிப்பாய்
சாமம்நாலு கடந்தபின்பு தீயாறிமாற்றாநாள்தான்
மாலையிலே எடுத்துப்பார்
என்னசொல்வேன் மகத்தான செந்தூரங்காந்திமெத்த
வாலையுடன்
பூசைநைவேத்தியங்கள் வாகுடனே தான்செய்து எடுத்திடாயே
விளக்கவுரை :
[ads-post]
1858. எடுக்கவே செந்தூரம்
பதனம்பண்ணு என்மகனே வெள்ளிதனில் பத்துக்கொன்று
கொடுக்கவே மாற்றதுவு
மெட்டதாகும் குறையாது வாணிக்கு மேலேகாணும்
துடுக்குடனே தகடடித்துப்
புடத்தைப்போடு துகளற்ற பசுந்தங்கம் புகலப்போமோ
விடுக்கவே கடைதனிலே
மாறியுண்ண விரைவான சமுசாரிக்கான தன்றே
விளக்கவுரை :
1859. அன்றான வித்தையது
அவனியோர்க்கு அப்பனேகிட்டாது யாருக்குந்தான்
தன்றான விதியாளி வருவானானால்
தாரணியிலிந்தவித்தை அவர்க்கே யெய்தும்
பன்றான சாத்திரங்கள்
படித்தாலென்ன பலநூலுந்துறைகொண்டு பார்த்துமென்ன
ஒன்றான குருபிரானனிருந்தால்
வுத்தமனே லபிக்குமடா புண்ணியோர்க்கே
விளக்கவுரை :
1860. புண்ணியனா மின்னமொரு
கருமானங்கேள் புகழான சித்தர்கள்தான் செய்யுமார்க்கம்
திண்ணமுடன் சுக்கானின்
கல்லையப்பா திறமுடனே சேரொன்று கொண்டுவந்து
வண்ணமுடன்
வறுவகைஜெயநீர்தன்னால் மாட்டடா எண்சாமம் சுறுக்குத்தாக்கு
கண்ணனிட மூலியப்பா
தன்னைவாங்கி வருவாக பொதிந்துமே கவசஞ்செய்யே
விளக்கவுரை :