போகர் சப்தகாண்டம் 1861 - 1865 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1861 - 1865 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1861. செய்யவே சீலையது வேழுஞ்செய்து சிறப்புடனே ரவிதனிலே காயவைத்து
பையவே கெஜபுடத்தில் மைந்தாகேளு பாங்காகப் புடம்போடச் சுண்ணமாகும்   
வெய்யவே சுண்ணமதை யெடுத்துக்கொண்டு விருப்பமுடன் ரவிதனிலே பத்துக்கொன்று
தொய்யவே தானுருக்கி கொடுத்துப்பாரு துறையான செம்பதுவு மூறல்போச்சே

விளக்கவுரை :


1862. போச்சென்று விடுகாதே புண்ணியாகேள் பொலிவான செம்பதுவு மூறலேகி
நீச்சென்ற சிலிம்பதுவு மிகவேநீங்கி நிலையான சொகுசுநிறந் தன்னிலொப்பாய்
போச்சென்ற செம்பதுவுமொன்றேயாகும் பேரான தங்கமது வொன்றேயாகும்
மாச்சென்ற இரண்டுருவு மொன்றாய்ச்சேர்த்து மகத்தான பொன்னிறமாகுந்தானே

விளக்கவுரை :

[ads-post]

1863. தானான பொன்னதுவு மாற்றுமாகும் சார்வாகப் புடத்துக்கு வுறுதிதங்கம்
மானான தங்கமது பசுமைமெத்த மார்க்கமுடன் சித்தர்கள்தான் செய்யும்வேதை
பானான கருவாளி காண்பானாகில் படுமுன்னே சுக்கனைச்சுன்னம்பண்ணி
தேனான சரக்குவகை யாவுங்கொன்று தேசத்தில் வாதிகட்கு குருவாவானே

விளக்கவுரை :


1864. குருவான வாதிகட்கு வழியுஞ்சொல்வேன் குறிப்புடனே சமாதிகட்கு நிலையுஞ்சொல்வேன்
பருவான பூநீருக்குறியுஞ்சொல்வேன் பாரினிலே வைத்தியற்கு வுணவுஞ்சொல்வேன்
திருவான மூலிவகைபோக்கு சொல்வான் திரளான கற்பத்துக் குறுதிசொல்வான்
முருவான சத்துரு மித்துருவுஞ்சொல்வான் முறையான சிமிட்டுவித்தைக் கருசொல்வானே

விளக்கவுரை :


1865. சொல்வானே மாணாக்கள் பிழைக்கவென்று சூட்சாதி சூட்சமெல்லாம் பிரித்துசொல்வான்
வெல்வான மின்னமொரு கருமானங்கேள் மிக்கான வதீதமென்ற வித்தைதன்னை
பல்வானே ஈடொன்று புகலக்கேளும் பொலுவான சீஷனுக்கு மைந்தாகேளு
நல்லதொரு செவ்வட்டை செம்பூநாகம் நலமான குழியானைப் பூச்சியாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar