போகர் சப்தகாண்டம் 1866 - 1870 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1866 - 1870 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1866. பூச்சியுடன் தம்பலமாம் பூச்சியாகும் புகழான பச்சோந்தி பிச்சுதானும்
காச்சியென்னுங் கருங்குருவி பிச்சுதானும் கெவுரியுடபட்சியுட பிச்சுதானும்
மாச்சியென்ற கழல்வேண்டு மொக்கச்சேர்த்து மகத்தான புனுகுடைய பச்சைப்பூரம்
பாச்சென்ற கஸ்தூரி ரோசனையுந்தானும் பளிங்கான சுண்ணமென்ற காரமாமே

விளக்கவுரை :


1867. காரமுடன் தேனுடனுன் கருவாலாட்டி காட்சியுடன் சிமிழ்தனிலே பதனம்பன்னு
தீரமுடன் குளிகையொன்று செய்துகொண்டு திகட்டாதே வறுசிவைபரந்தன்னோடொக்க
சாரமுடன் பலகாரம் வர்க்கந்தன்னில் சார்பாக கொடுத்துவிட மைந்தாபாரு
பாரமுடன் வுன்மீதி லெந்தநாளும் பட்சமுடன் வாழ்வதற்கு சொன்னோம்பாரே

விளக்கவுரை :

[ads-post]

1868. பாரேதான் வினோதமென்ற வித்தையப்பா பாரிலுள்ள சித்தர்முனி ரிஷிகள்தாமும்
சீரேதான் மனமுவந்து வெந்தன்மீதில் சிறப்புடனே பட்சம்வைத்து காப்பதற்காய்
மேரேதான் விண்ணுலகம் காண்பதற்கு மிக்கான தேரொன்று கட்டினேன்யான்
நேரேதான் தங்கரதம் செய்தமார்க்கம் நேர்ப்புடனே யாமுரைப்போம் போகர்தாமே

விளக்கவுரை :


1869. தாமேதான் சக்கரமும் பதினாராகும் தக்கான யிரிசியது எட்டதாகும்
போமேதா னிடதுபுறம் கெஜமோநூறு பொங்கமுடன் வலதுபுறம் கெஜமோநூறு
வேமேதான் நெடுக்குபுரம் சக்கரமும்நாலு வெளியான குறுக்குபரம் சக்கரமும்நாலு
தாமேதான் நடுமையம் சக்கரமுமெட்டு தாழ்வாக வுருளையென்ற யிரிசியாமே

விளக்கவுரை :


1870. இரிசியுடன் பாருமதுமெட்டதாகும் இணையான சட்டமது முப்பத்திரண்டு
குறிசியுடன் நெடுஞ்சட்டம் அறுபத்திநாலு குறுக்கான வுள்சட்டம் பதினாறுமாகும்
பரிசியுடன் மேல்வட்டம் நூற்றிருப்த்தியெட்டு பாங்குடனே பழுதுகளும் இருநூற்றன்பத்தாறு
வரிசையுட னொன்றுக்குள்ளிழுத்துமிகமாட்டி வலுமையுனாணிகளுமிகபொதிந்துமாட்டே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar