1871. மாட்டையிலே
சக்கரத்திற்குருளை யிருகம்பி மாறாட்டமில்லாமல் அணியுடனேமாட்டி
கோட்டையிலே சித்தியல்லோ
வளையமுள்ள கம்பிகுறுக்குமுதல் நெடுக்குமுதல் குவிந்துமுனைமட்டும்
வாட்டமுடன் நடுவருளை
கொலுசிமிகமாட்டி வார்புரத்தில் சக்கரத்தின் முனையோரமட்டும்
நீட்டமுடன் றலைபக்கம்
சுக்கானிடகம்பி நடுங்கம்பி புறவட்டம் நிலைக்கமிகபூட்டே
விளக்கவுரை :
1872. பூட்டையிலே தாளுடனே
யிரிசிகம்பி மாட்டி புகழுடனே நடுவட்டம் வட்டமத்தி
கூட்டமுடன் சட்டமது
வரிவரியாய் மாட்டி கூர்மையுடன் சுழலாணி நடுவாணிதன்னில்
தேட்டமுடன் அஞ்சுருளை
மிகப்பூட்டி தேர்மக்கியடிவாரம் பின்னலுடன் சட்டம்
பூட்டகமாம் பலகையின்
மேலாணிமிகத்தாங்கி புகழ்பெறவே சுற்றோரம் கத்தரிப்பாய்செய்யே
விளக்கவுரை :
[ads-post]
1873. செய்யவே கத்தரிப்பில் மணிகள்மிகமாட்டி சேர்ந்ரவடிவாரமது பலகைமிகப்பூட்டி
தொய்யவே வூஞ்சலதுபோல
மிகச்செய்து துப்புறவாய் மையூறுவாணிமிகமுடுக்கி
பையவே யிரிசுக்கு
வுள்ளுருளைமாட்டி பாங்குடனே வுள்ளாழி கடையாணிமாட்டி
மையவே சக்கரமும்
சுழலமிகச்செய்து மான்மையுடன் நீளமதுசமைத்திட்டேன்காண்
விளக்கவுரை :
1874. காணவே யடிவாரம்
நங்கூரமுமாச்சு கயவான மேல்வாரம் பீடமதுசொல்வோம்
ஏணவே சட்டமது குத்துக்கால்
நூறு யெழிலாக குறுக்குவரை பத்துசட்டமாகும்
பூணவே நெடுக்குவரை
பத்துசட்டமாகும் புகலான காலதுவும் முப்பத்திரண்டு
தோணவே நடுக்கம்பி
சோடசமுமாகும் தோராதவுள்கம்பி வட்டமிதமாமே
விளக்கவுரை :
1875. அட்டமுடன் சட்டமது
கெஜநீளம்பத்து அதன்மேலே சிம்மாடு கட்டையிருகெஜமாம்
சட்டமுடன் வேல்வரை
துளைகளிருநூறாம் சாங்கமுடன் துளைகளிலே கம்பிமிகசெருகி
நெட்டமுடன் மேல்வரை
வாணிகொண்டுமுடுக்கு நெடிதான யடிமட்டும் வூடுருக்கத்தாக்கி
குட்டமென்ற சட்டமது
கீழ்புரமும் நாட்டி குவலயத்தில் தாங்கு கால்மிகக்கொண்டுசாத்தே
விளக்கவுரை :