போகர் சப்தகாண்டம் 1876 - 1880 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1876 - 1880 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1876. சாத்தியே நாற்புரமும் வரிசையுடன்மாட்டி சர்வாங்கக்காலுடனே சட்டமொன்றுபூட்டி
ஏத்தியே நடுமையம் திருகுசிம்மாடு எழிலானசுற்றோரம் வளையமிகச்செய்து
சூத்திரமாம் சட்டமது பதினாறுசட்டம் சுழல்கின்ற சட்டமது முப்பத்திரண்டு
நேர்த்தியுடன் தானமைத்து நெடுவூஞ்சல்போல நேர்மையுடன் செய்துவிட்டேன் வின்னமிகக்கேளே

விளக்கவுரை :


1877. கேட்கவே மேற்சதுரம் வட்டமதுபத்து கெடியான சட்டமது குறுக்கு நெடுபத்து
சூட்சமுடன் மேற்சிகர வட்டமது வஞ்சு சுருளான நடுச்சிகரம் வட்டம்நாலு
தாக்கவே மேல்வட்டம் நடுச்சிகரமூன்று தாழ்மையுடன் மேல்வட்டம் நடுச்சிகரம்ரண்டு
தூட்கமுடன் சட்டநடுச்சிகரம்வென்று துடிப்பான வுச்சியது கூர்மைமிகுவாமே

விளக்கவுரை :

[ads-post]

1878. மிகுவான தேரதுதான் சூட்சமிகமாட்டி மேன்மைபெற சோடித்து வஞ்சுருனியாலே
தகுமான கொலுசுடனே யொன்றோடொன்று வாய்சார்புடனே யிருக்கியல்லோ சட்டமதில்பிகித்து
பிகுவான நடுவாணி தன்னில்மிகமாட்டி பேரான காந்தமென்ற சத்துமிகப்பூசே

விளக்கவுரை :


1879. பூசியே தேரிலுள்ள யிரும்புக்கெல்லாம் புகழான காந்தத்தின் சத்தேயூட்டி
வாசியென்ற மேலாணி காந்தவாணி வரையான கீழாணி யிரும்புமாகும்
மாசியென்ற பலகையெல்லாம் சத்தேயாகும் மகத்தான யிரும்புடனேகாந்தஞ்சேரில்
ஊசியென்ற காந்தமது சத்துதன்னால் வுயறவே பறக்குமடா ரதந்தான்பாரே

விளக்கவுரை :


1880. பாரேதான் நாலுபுரம் குத்துக்காலில் பாங்கான வாளியுடன் சிம்பமாகும்
நேரேதான் புரவியது மாட்டிருக்கும் நெடிதான பாதமது யிரும்பேயாகும்
சீரேதான் சிற்சிவது காந்தமாகும் சிறப்பான பீடமது முப்பத்திரண்டு
கூரேதான் பீடமென்ற பலகைதன்னில் குருமுனியாம் சித்தர்நழுனிவர்தாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar