1881. முனியான நவகோடி ரிஷிகள்தாமும் முனையான சீனபதிஜெனங்களெல்லாம்
தனியான சித்திரமாந்
தேரிலேற்றி தாக்குடைய விமையகிரி பர்வதத்தில்
பனியான மேலவரை கொண்டுசென்று
பாராதகாட்சியெல்லாம் பார்க்கவிட்டு
தொனியான வாத்தியங்கள்
கேட்டும் கோயில்தோற்றமுள்ள வடிவேலர் சேர்வைதானே
விளக்கவுரை :
1882. சேர்வையாம் வடிவேலர்
தன்னைக்கண்டார் சேனைமுதல் சரிசனங்கள் யாவும்பார்த்தார்
பார்வையாம் சித்தர்முனி
ரிஷிகள்தாமும் பட்சமுடனென்மீதில் கிருபைகூர்ந்து
நேர்மையுடன் வரமெனக்கு
யீந்தாரப்பா நெறியுடனே தேவரதம் நடத்தினேன்யான்
கூர்மையுடன் மலையோரம் சுற்றிவந்து
குறிப்புடனே சீனபதி யிறக்கிட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
1883. இறக்கவே சித்தர்முனி
ரிஷிகள்தாமும் இயலாகவென்மீதில் பட்சம்வைத்து
சிறக்கவே யெந்தனுக்கு
வுபதேசங்கள் சீராக அத்தனையும் புகட்டிவிட்டாரப்பா
திறக்கவே சீனபதிமூன்றுகாதம்
தெளிமையுள்ள வெள்ளையென்ற ஜெனங்களெல்லாம்
பறக்கவே சித்தரரதம்
சூட்சாசூட்சம்பார்த்துமே பிர்மித்து மயங்கினாரே
விளக்கவுரை :
1884. மயங்கினா ரென்மீதி
லிச்சைகொண்டார் மானிலத்தில் பெண்களெல்லாம் மோகமானார்
தியங்கியே என்னிடத்தில்
மொகித்தார்கள் திறலான பெண்களெல்லாஞ் சீனந்தன்னில்
நயமுடனே நல்வார்த்தை
பேசியேதான் நாட்டிலுள்ள வளப்பமெல்லாம் நன்காராய்ந்து
மயமுடனே தாமிருந்தார்
சீனந்தன்னில் மகாபதி பட்சமது யிருந்தார்பாரே
விளக்கவுரை :
1885. இருந்தாரே பூரணமாம்
சந்திரபட்சம் யெழிலுடனே தேவரதமுடுக்கியேதான்
திருந்தமுடன்
கடலேழுஞ்சுத்திவந்தேன் திக்கெட்டில் வதிசயங்கள் யாவும்பார்த்தேன்
பொருந்தவே வணாந்திரத்தில்
ரதமிறக்கி பொங்கமுட னவர்களாசீர்மத்தில்
குருந்தமுடன் போனபின்பு
யடியேன்தானும் குளிகைகொண்டு சீனபதிவந்திட்டேனே
விளக்கவுரை :