1886. வந்திட்டேன்
இதிகாசவித்தையெல்லாம் வாகுடனே மாணாக்கள் பிழைக்கவென்று
திந்திட்டேன் காலாங்கி
கிருபையாலே சதாகாலமுள்ளமட்டும் தரணிமீது
பந்திட்ட வெண்பேருதான்
விளங்காபாலித்தேன் லோகத்துமாந்தர்க்காக
முந்திட்ட வித்தைகளும்
கோடிவர்க்கம் முனையாகக் காட்டிவிட்டேன் போகர்தாமே
விளக்கவுரை :
1887. போகரென்றால் வித்தையது
பொய்யாதப்பா பொங்கமுடன் சித்தர்கள்தான் வித்தையல்ல
சாபமுடன் சொல்வார்கள்
முனிவர்சித்தர் சார்பாக யான்சொல்வேன் அதீதமார்க்கம்
தாபமுடன் காலாங்கி தனைவணங்கி
சார்பாகச்செப்பிவிட்டேன் துறைகளெல்லாம்
சேபமுடன் கருவாளியாவானானால்
சுந்தரனே லபிக்குமடா புண்ணியவானே
விளக்கவுரை :
[ads-post]
1888. புண்ணியனே வின்னமொரு
கருமானங்கேள் புகலுகிறேன் நாகமென்ற செந்தூரந்தான்
திண்ணமுடன் நாகமொரு
பலமேவாங்கு திறமான செம்பதுவும் பலமோகால்தான்
வண்ணமுடன் வயமதுவும்
பலமோகால்தான் வகுப்பான வங்கமது பலமோகால்தான்
நண்ணமுடன் தங்கமது
பலமோகால்தான் நலமான ரசமதுவும் பலமும்ரண்டே
விளக்கவுரை :
1889. இரண்டான கெந்தியது பலமோரண்டு யெழிலான கானகமும் பலமோகால்தான்
திரண்டான மனோசிலையும்
பலமோகால்தான் திகழான வீரமது வராகன்ரண்டு
மாண்டான வளையலுப்பு
விராகன்ரண்டு மகத்தான பூநீரு வராகன்ரண்டு
சுரண்டான விவையெல்லாம்
வொன்றாய்கூட்டு சூட்சமுடன் குழியம்மி தன்னிலாட்டே
விளக்கவுரை :
1890. ஆட்டவே கையானின் சாற்றினாலே
அப்பனே வெண்சாமமரைத்தபோது
நீட்டமுடன் வெண்ணெயது
போலேயாட்டி நெடிதான ரவிதனிலே காயப்போடு
வாட்டமுடன் காய்ந்தபின்பு
பொடியதாக்கி வளமாக காசியென்ற குப்பிதன்னில்
தேட்டமுடன் தான்போட்டு
மைந்தாகேளு தெளிவான மரக்கல்லால் கொண்டுமூடே
விளக்கவுரை :