1891. மூடவே சீலையது
வலுவாய்ச்செய்து முசியாமல் ரவிதனிலே காயவைத்து
நீடவே சட்டிதனில்
மணலைக்கொட்டி நினைவாக சட்டிநடு குப்பிவைத்து
தேடவே குப்பியின்மேல்
மணலைக்கொட்டி தெளிவாக சட்டிகொண்டு கவிழ்த்துமூடி
சாடவே சீலையது
வலுவாய்ச்செய்து சாங்கமுடன் வாலுகையில் ஏற்றிடாயே
விளக்கவுரை :
1892. ஏற்றவே கமலமென்ற தீயாலப்பா
என்மகனே யெண்சாமம் யெரித்தாரப்பா
போற்றவே யாறியபின்
எடுத்துப்பாரு பொங்கமுடன் செந்தூரம் சொல்லப்போமோ
வாற்றமென்ற செந்தூரம்
பதனம்பண்ணு மகத்தான வேதையிது கோடாகோடி
நாற்றமென்ற செம்பதனில்
நாலுக்கொன்று நலமுடனே தானுருக்கிக் கொடுத்துப்பாரே
விளக்கவுரை :
[ads-post]
1893. கொடுத்துப்பார் செப்பதுவு
மிரண்டுபோகும் குணமாகும் வூரலது வடுத்துக்கொல்லும்
தடுத்துமே கரியோட்டி
லூதிப்போடு தாக்கான செம்பதுவும் சொகுசுமெத்த
தொடுத்துப்பார்
செம்புதனைமதிநாலுக்கு துப்புரவாய் தானுருக்கி யெடுத்துப்பாரு
விடுத்துப்பார் மாற்றதுவும்
ஏழதாகும் வுரைவான பொன்னதுவும் பசுமைகாணே
விளக்கவுரை :
1894. காணவே பொன்னென்ற யேமமாச்சு
கருவான தங்கமது வைந்துக்கொன்று
பூணவே
தானுருக்கியெடுத்துக்கொண்டு புகழாக தகடடித்துப் புடத்தைப்போடு
வேணவே பூங்காவிதன்னிலப்பா
விருப்பமுடன் புடம்போடப் பசுமையாகும்
மாணவே சித்தர்செய்யும்
வேதையாகும் மார்க்கமுடன் நாதாக்களதீதந்தானே
விளக்கவுரை :
1895. தானான செந்தூரங்
குன்றியுண்ணு தயவுடனே வெண்ணய்தனி லனுபானந்தான்
வேனான மண்டலந்தான் கொண்டபோது
மிக்கான தேகமது கற்றூணாகும்
கோனான குருவருளால்
தேகம்பொன்னாம் குவலயத்தில் கோடிவரையிருக்கலாகும்
பானான காலாங்கி
கிருபைதன்னால் பாடினேன் போகரிஷி பண்மைபாரே
விளக்கவுரை :