1896. பண்மையா மின்னமொரு
கருமானங்கேள் பாங்கான சாரமது பலம்நாலாகும்
திண்மையாம் கெந்தியது
பலம்வைந்தாகும் திடமான வெண்காரம் பலமிரண்டாகும்
விண்மையாம் பூரமது
பலம்ரண்டாகும் வகுப்பான வீரமது பலமொன்றாகும்
கண்மையாம் சரக்கெல்லா
மொன்றாய்க் கூட்டி களிம்புபோல் தானரைப்பாய்சாமம்பத்தே
விளக்கவுரை :
1897. பத்தான சாமமது யரைப்பாயப்பா பாங்குடனே வாடுதின்னாப் பாலைமூலி
சித்தான சித்தருட மூலியப்பா
ஜெகத்திலே தானறிவார் மாண்பர்தாமும்
முத்தான நிழல்தனிலே
காயவைத்து முசியாமல் சீஷாவிலடைத்தஉக்கொண்டு
சுத்தான
புட்டிக்குச்சீலைசெய்து சுத்தமுடன் மண்மறைவில் தயிலம்வாங்கே
விளக்கவுரை :
[ads-post]
1898. வாங்கியே தயிலமது பதனம்பண்ணு
வாகுடனே தயிலமதை யெடுத்துமைந்தா
பாங்குபெற
வாருமாற்றானிக்கொப்பால் பசும்பொன்னாம் விராகனது தகடடித்து
தீங்கில்லாத் தயிலமது
குன்றிதானும் திகழாகத்தானெடுத்துப்பூசி மைந்தா
ஏங்கியே திரியாதே
புடத்தைப்போடு யெழிலான பொன்னதுவு மாற்றுபாரே
விளக்கவுரை :
1899. மாற்றான பொன்னதுவும்
பசுமைத்தங்கம் மகத்தான நாதாக்கள் வேதைகாணும்
காற்றான தயிலமது காரமெத்தக்
கடுங்காரச் செயநீருமிதுக்கீடுண்டோ
சேற்றான துருத்தியது பிழைப்பதற்கு
சூட்சமுடன் சித்தர்முனி செய்யும்வேதை
வேற்றான மாந்தர்கட்கு
யிந்தமார்க்கம் வெளியாகத் தானுரைத்தோம் வண்மையாமே
விளக்கவுரை :
1900. வண்மையா மின்னமொரு
கருமானங்கேள் மார்க்கமுடன் நாதாக்களதீதவித்தை
உண்மையுடன் சொல்லுகிறேன்
மைந்தாபாரு உவப்பான கல்லுப்பு பலமேகால்தான்
திண்மையுடன் மதியுப்பு
பலமோகால்தான் திறமான துருசதுவும் பலமோகால்தான்
நன்மைபெற சாரமது
பலமோகால்தான் நலமான சாரமது பலங்கால்கூட்டே
விளக்கவுரை :