1901. கூட்டவே லிங்கமது
பலமோகால்தான் குணமான பூநீறு பலமோகால்தான்
வாட்டமுடன் சீனமது
பலமோகால்தான் வகுப்பான துத்தமது பலமோகால்தான்
காட்டமுடன் காரமென்ற
ஜெயநீர்தன்னால் நலம்பெறவே தானரைப்பாய் பத்துசாமம்
நீட்டமுடன்
யாறுமாற்றாணிக்கொப்பாய் நேரான பசும்பொன்னு தகடதாக்கே
விளக்கவுரை :
1902. தகடான ரேக்கதனை
யெடுத்துமைந்தா தண்மைபெற மெழுகதனை தகட்டிற்பூசி
நிகடான மெழுகதனைப் பூசியல்லோ
நேர்புடனே பூங்காவிக்குள்ளேபோடு
சகடான செம்பதுவும்
கட்டியேதான் சார்பான தங்கமதுவாகும்பாரு
பகடான மாற்றுவகை கூறப்போமோ
பசுந்தங்க மிதுக்கீடு சொல்லொண்ணாதே
விளக்கவுரை :
[ads-post]
1903. சொல்லவென்றால் நாவேது
பாவுமேவு சுருதிமுதல் யாராய்ந்து படித்துமென்ன
வெல்லவே சித்தர்கள்
கைமறைப்பு மேதினியில் யாராலும் காணப்போமோ
புல்லவே காலாங்கிநாதர்பாதம்
போற்றியே சதாகாலம் பணிந்துநித்தம்
நல்லவே மானிடர்கள்
பிழைக்கவென்று நாட்டினேன் போகரிஷி நவிலத்தானே
விளக்கவுரை :
1904. நவிலவே போகரிஷி
சொல்லுமார்க்கம் நாட்டுளோர் கருவாளி காண்பான்பாரு
புவிலவே வின்னமொரு
கருமானங்கேள் புகழான வெல்வங்கம் பலமொன்றாகும்
கவிலவே பாஷாணம் பலமொன்றாகும்
கடிதான வயமதுவுந் தூளேகாலாம்
தவிலவே ரசமதுவும்
பலங்காலாகும் தாழ்மையுடன் தானரைப்பாய் சாமம்நாலே
விளக்கவுரை :
1905. நாலான சாமமது வரைக்கும்போது
நலமான மெழுகதுபோலாகும்பாரு
பாலான தேனதுவும் இரண்டுசாமம்
பாகமுடன் தானரைப்பாய் மைபோலாக
வேலான பசுநெய்பால் சாமம்நாலு
மிக்கான வெண்காரம் பொரித்துப்போடு
கோலான கரண்டியினால்
கிண்டிக்கொண்டு கொப்பனவே வச்சிரமாங் குகையிற்போடே
விளக்கவுரை :