1906. போடவே சீலையது
வலுவாய்ச்செய்து பொங்கமுடன் ரவிதனிலே காயவைத்து
நீடவே குகைதனிலே
யுருக்கியேதான் நிலையான களங்குதனை யுடைத்துப்பாரு
நாடவே களங்குதனை சொல்லப்போமோ
நாதாக்கள் செய்யுமிது வதீதமார்க்கம்
கூடவே களங்குதனை
யெடுத்துக்கொண்டு குமுறவே வெள்ளிசெம்பில் பத்துக்கொன்றே
விளக்கவுரை :
1907. பத்தான யிடைதனிலே
குருவொன்றீய்ந்து பதமாகத் தானெடுத்து வூதிப்போடு
புத்தான களங்கதுவும்
நீங்கியல்லோ புகழான வெள்ளியது மாற்றுகாணும்
மத்தான வெள்ளியது பசுமைமெத்த
மகத்தான மட்டமது நாலுக்கொன்று
சித்தான தங்கமது
வொன்றுகூட்டி தெளிவாக வாரடித்துப் புடத்தைப்போடே
விளக்கவுரை :
[ads-post]
1908. போடவே மாற்றதுவும் பசுமையாகும்
பொங்கமுட னின்னமொரு மார்க்கங்கேளு
நீடவே கரிவங்கம்
பலமும்வாங்கி நிலையான தாளகமும் சரியதாக
மூடவே முலைப்பாலால்
தானரைத்து முசியாமல் வங்கத்துக் கங்கிபூட்டி
சூடவே சீலைமண்
வலுவாய்ச்செய்து சூட்சமுடன் கெஜபுடத்தில் போட்டிடாயே
விளக்கவுரை :
1909. போட்டவுடன் தீயாறி யெடுத்துப்பாரு பொங்கமுடன் களங்கமது வென்னசொல்வேன்
தாட்டிகமாய்க் களங்கமதை
யெடுத்துமைந்தா தாக்கிடவே ரவிதனிலே பத்துக்கொன்று
நீட்டமுடன் கொடுத்துருக்கி
யூதிப்போடு நேரான செம்பதுவும் கட்டிப்போச்சு
வாட்டமுடன் செம்புதனைப்
பதனம்பண்ணு வாகுடனே வெள்ளிதனில் நாலுக்கொன்றே
விளக்கவுரை :
1910. ஒன்றுடனே வாரடித்துப்
புடத்தைப்போடு ஓகோகோ பசுமையது சொல்லப்போமோ
குன்றான மலைமீதி
லிருக்குஞ்சித்தர் கூர்மையுடனாராய்ந்த நூல்கள்தன்னில்
நன்றான கைமறைப்பு
யாவும்பார்த்து நலமுடனே தேர்ந்தெடுத்த விந்தபாகம்
பன்றான மாணாக்கள்
பிழைக்கவென்று பாடிவைத்தேன் போகரிஷி பண்பாய்த்தானே
விளக்கவுரை :