போகர் சப்தகாண்டம் 1911 - 1915 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1911 - 1915 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1911. தானான வித்தையது வதீதவித்தை தயவுடனே மாணாக்கள் பிழைக்கவென்று
மானான காட்டகத்தில் சென்றுயானும் மார்க்கமுடன் மூலியொன்று யாராய்ந்தேதான்
கோனான யிடையர்களை யிடமுங்கேட்டு குறிப்பாக இடைக்காட்டார் சமாதிகண்டு
பானான சமாதியிடம் சென்றுயானும் பரிவாக நானவரைக் கண்டிட்டேனே

விளக்கவுரை :


1912. கண்டிட்ட போதையிலே சித்தர்தாமும் கடுகெனவே யாரப்பா வென்றுகேட்க 
மண்டிட்டு அடியேனும் தாள்பதிந்து மகாதேவர் காலாங்கி சிஷனென்றேன் 
தெண்டிட்ட யெந்தனையும் கேள்விகேட்டார் தெளிவுடனே வுத்தாரஞ் சொன்னேனப்பா
விண்டிட்டு நானவரை வணங்கிமிக்க வேதாந்தம் சித்தாந்தம் கேட்டேன்பாரே

விளக்கவுரை :

[ads-post]

1913. கேட்டேனே யென்மீதில் கிருபைவைத்துக் கீர்த்திபெற யெந்தனுக்கு வுபதேசித்தார்
மாட்டேனே எண்ணாமல் சித்துதாமும் மனங்கொண்டுபோதித்தார் கோடிமார்க்கம்
தாட்டிகமா யானுமல்லோ கண்டாராய்ந்து தயவுடனே நானவரைக் கருவுகேட்டேன்
வாட்டிகமாய் கருவெனக்கு வுரைத்தாரப்பா வாகுடனே வணாந்திரத்தில் சென்றேன்காணே

விளக்கவுரை :


1914. கண்டேனே மூலியுட வனாந்திரத்தை காடெல்லாந்தான் திரிந்து எடுத்தேனப்பா
விண்டேனே மதிமயக்கப்பூடுவொன்று விரைவான திகைப்பூண்டு வொன்றுதானும்
அண்டாத மரந்தனிலே ஏறுங்கொட்டை அழிஞ்சியிடவித்தப்பா வதனோடொக்க
பண்டான பழத்தோடு ஓடும்போக்கி பாங்குடனே குழித்தயிலம் வாங்குவாயே 

விளக்கவுரை :


1915. வாங்கியே தயிலமதை பதனம்பண்ணு வாகுபெற  சீஷாவிலடைத்துக்கொண்டு
ஏங்கியே திரியாதே மாணாகேளு எழிலான வித்தையிது ஜாலவித்தை
தூங்கியே துஷ்டருடன் கூடாமற்றான் துணையான சீஷனொன்று தேடிக்கொண்டு
பாங்குபெற ஜாலவித்தை யாடுவாய்நீ பாரினிலே சித்தனைப்போலாவாய்ப்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar