போகர் சப்தகாண்டம் 1916 - 1920 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1916 - 1920 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1916. பாரப்பா தயிலமது மயக்கும் பார்வை பாரினிலே வித்தைக்கு கருதானாகும்
ஆரப்பா மேதியின்றோலினாலே அப்பனே டோலொன்று வுண்டுபண்ணி
நேரப்பா யிருபுறமும் கச்சைபூண்டு நெடிதான தோல்வாரு இறுக்கிமாட்டி
சீரப்பா முடிச்சுமுப்பத்திரண்டு சிறப்புடனே தலைபுறத்தில் சுறுக்கிடாயே

விளக்கவுரை :


1917. சுறுக்குடனே சூத்திரமாங் கயிறுமாட்டி சோடினைகள் மிக்கவது செய்துகொண்டு
குறுக்குடனே திரைமாட்டி கொம்புகட்டி குடியானபேர்க ளொருபக்கம்நிற்க
முறுக்குடனே கிடாவொன்று நேர்நிறுத்தி மூர்க்கமுடன் கத்திகொண்டு வெட்டினேன்யான்
தருக்குடனே சீனபதிஜெனங்களெல்லாம் சட்டமுடன் தான்பார்த்து பிரமித்தாரே

விளக்கவுரை :

[ads-post]

1918. பிரமித்து நிற்கையிலே வடியேன்தானும் பேரான கிடாவதனை யெடுத்துமைந்தா
திரமுடனே டோலிக்குள் தானடைத்து திறமையுடன் வுள்ளிருந்த கிடாவைத்தானும்
வரருடனே தானழைத்து ஜெனங்கள்முன்னே மஅனிலத்தில் நடுநடுங்கி பிரமித்தேங்க
குரமுடனே தானழைத்தேன் கிடாவையப்பா கொப்பெனவே கண்டுபயந்தொதுங்கினாரே

விளக்கவுரை :


1919. ஒதுங்கையிலே வடியேனும் முன்னிருந்த வுயிர்போன கிடாவதனை யடக்கஞ்செய்தேன்
பதுங்கையென்ற டோலிக்குள் அடைத்துப்போட்டேன் பார்வைக்கு திரைமறைவில் காணாமற்றான்
சதுங்கையுடன் கிடாவங்கே குதிக்கும்போது ஜெனங்களெல்லாம் மிகவாச்சரித்து
மதுங்கையென்ற மரம்போலே நின்றுவிட்டார் மன்னவனே சாலமென்ற மோடியாமே

விளக்கவுரை :


1920. மோடியென்ற தொழிலதனைச் செய்யும்போது முன்செய்த கருத்தயிலம் வாடமிட்டு
ஓடியே துலைதூரம் சென்றுபோயி வுத்தமனே வேடமது பூண்டுகொண்டு 
தேடியே குறத்தியென்ற பெண்ணைப்போல தெரியாமல் சாலமென்ற மையைதீட்டி
நீடியே பெட்டியி லடக்கஞ்செய்தேன் நீணிலத்தில் யெல்லவரும் பார்த்திட்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar