போகர் சப்தகாண்டம் 1921 - 1925 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1921 - 1925 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1921. பார்க்கையிலே பெட்டிதனில் மூடிவிட்டேன் பாராளும் மன்னர்முன்னே வடக்கஞ்செய்தேன்
மூர்க்கமுடன் கட்டாரி தன்னைநோக்கி முயன்றுமே மேல்நோக்கிபூமிதன்னில்
தீர்க்கமுடன் பெட்டியின்றன் பக்கம்நின்று குத்திவிட்டேன் மாதுதன்னை
மார்க்கமுடன் மாதினுட பக்கமெட்டு மானிலத்தில் ஜனங்களெல்லாம் மயங்கினாரே

விளக்கவுரை :


1922. மயக்கமுடன் நிற்கையிலே வடியேன்தானும் மறைப்படைய மையதனை எடுத்துக்கொண்டு
தியக்கமுடன் நெற்றிதனில் பூசிக்கொண்டு தியங்கவே யெல்லோரும் பிரமித்தேங்க
தயக்கமுடன் மறைப்புடனே போயிருந்து ஜனத்திலே குறமாதுயானுந்தானும்
துயக்கமுடன் வெளியாங்கமாகி வந்தோம் துறைராஜர் மெச்சிடவே செய்தேன்யானே

விளக்கவுரை :

[ads-post]

1923. செய்தேனே மோடியிலே யனந்தம்பேர்க்கு சிறப்பான ஜாலத்தி லனந்தம்பேர்க்கு
செய்தேனே பேதனங்களனந்தம்பேர்க்கு செழிப்பான கிண்ணவித்தை யனந்தம்பேர்க்கு
செய்தேனே சோளியிலே யனந்தம்பேர்க்கு செடல்கட்டி வித்தைகளிலனந்தம்பேர்க்கு
செய்தேனே பச்சிலையி லனந்தம்பேர்க்கு சோதித்தேன் கோடிவித்தை யதீதம்பாரே

விளக்கவுரை :


1924. பார்த்திட்டேன் சாலமென்ற வித்தைதன்னைப் பரிவாக சீனபதிலுற்றோர்தாமும்
கார்த்திட்ட வித்தைக்கு யெந்தன்மீது கருணைபெற வெகுபேர்கள் ஆசீர்மித்தார்
ஐர்ந்திட்டே னவர்களுக்கு வுபதேசித்தேன் யெழிலான வித்தைகளை கற்பித்தேதான்
ஊர்ந்திட்டு சீனபதிவிட்டு நீங்கி வுத்தமனே குளிகையது கொண்டேன்தானே

விளக்கவுரை :


1925. கொண்டேனே குளிகையது பூண்டுகொண்டேன் கோடானவித்தையெல்லாம் யானும்பார்த்து
கண்டவர்கள்பார்த்து மிகபிரமைகொண்டு காசினியில் செய்வதற்கு கருவுஞ்சொன்னேன்
விண்டபடி யொருவருக்குஞ் சொல்லவேண்டாம் வேதாந்ததாயினது வருளும்பெற்று
தொண்டனெனும் பெயர்பெற்று சதாகாலந்தான் தொல்லுலகில் சித்தனைபோல் வாழ்குவாயே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar