போகர் சப்தகாண்டம் 1926 - 1930 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1926 - 1930 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1926. வாழவே யின்னமொரு சூத்திங்கேள் வையகத்தில் நாதாக்கள் செய்யமாட்டார்
நீழ்கவே கருவூரார் அநேகஞ்செய்தார் நிலையான வித்தையிது வதீதவித்தை
மூழ்கவே கண்ணபிரான் பள்ளிகொண்ட முனியான சித்தரிஷி தடமுங்கண்டேன்
மாழ்கவே பொற்கடலின் மத்திபத்தில் மகத்தான கப்பலொன்று செய்தேன்யானே

விளக்கவுரை :


1927. செய்யவே மராமரக்கப்பல்தானும் சிறப்பாக ஆயிரம்கூட்டத்தோடும்
பையவே சூத்திரமா மரக்கலந்தான் பாருலகில் சீனபதியார்கள் மெச்ச
மெய்யவே நீளமது கெஜமெண்ணூறு மெதிரான வகலமது கெஜனேநூறு
பெய்யவே சதுரமது தீர்மானித்து பிசகின்றி முடித்தவகை கூறுவேனே

விளக்கவுரை :

[ads-post]

1928. கூறுவேன் சட்டமது பலகைகொண்டு குறிப்புடனே வில்லாணிதான்புணைந்து
வாறுடனே கயளர் நீளமளவெடுத்து வகுப்புடனே நெடும்புவை தன்னிற்சேர்த்து
காறுடைய வடிப்பீடந்தான் புனைந்து கருவான வாணிமிகத்தான் முடுக்கி
பேறுடைய விட்டமது குறுக்கணிந்து பேரான காலுடனே மாட்டிடாயே

விளக்கவுரை :


1929. மாட்டவே தொட்டியென்ற பீடமாச்சு மகத்தான ஏழுவரையுண்டுபண்ணு
நீட்டமுடன் காலாறு மண்டபத்தில் நிலையான தூணதுபோல் செய்துமேதான்
வாட்டமுடன் உயரமது கெஜநூறாகும் வாகுடனே ஏழுவரை வுள்ளடக்கி
பூட்டகமாய் முதல்வரையில் பலகைப்போட்டுப் புகழாகமேல்மூடி வழிசெய்தேனே

விளக்கவுரை :


1930. வழியான வறுபத்து நான்குவீடு வரையான எழுவரையின் கீழேயப்பா
நெறியான சன்னங்களும் அனந்தமாகி நேரான தெற்குமுகம் வடக்குமாக்கி
விழியான மேற்குமுகம்  கிழக்குமாக்கி வீரான கோட்டையது வுள்ளடக்கி
முழியான தெத்துடனே வாசலாக்கி முனையான இருபுரமும் சுக்கான்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar