போகர் சப்தகாண்டம் 1931 - 1935 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1931 - 1935 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1931. பார்க்கவே முதல்வரைக்கு மேலேயப்பா பாங்கான விரண்டாங்கால் மச்சியப்பா
ஏர்க்கவே பலகைபோல் சுவருண்டாக்கி யென்மகனே நாற்புரமும் கதவுண்டாக்கி
தீர்க்கமுடன் சட்டமது மேலேபோட்டு திறமானமாணி மிகப்பூட்டிமாட்டி
மாற்கமுடன் சிறுபரணி மேலேகட்டி மகத்தான சுக்கானின் யாணிபோடே

விளக்கவுரை :


1932. போடவே கீழாணி மேலாணிகொண்டு சொங்கமுடன் சூட்சுமமா மாட்டிப்போடு
நீடவே மூன்றாங்கால் மச்சுவீடு நேர்பான பலகைகொண்டு மூடிப்போடு
கூடவே சுத்தெங்கும் சன்னல்வைத்து கொப்பனவே வறுபத்து வாசல்தன்னில்
மேடவே வாசலுக்கு பலகைபோட்டு மேன்மையுடன் சட்டமதாய் பதிந்துசாத்தே

விளக்கவுரை :

[ads-post]

1933. சாத்தையிலே சூட்சமுனாணிபோட்டு சார்பாக மூலியிடம் சுக்கான்மாட்டி
காத்தடங்கும் பக்கமதில் சூட்சம்போட்டு பாங்குடனே சற்றெங்கும் கதவுமாட்டி
நேத்திய தாய்மேல்வட்டம் கீழ்வட்டங்கொண்டு நெடிவான வுள்வடந்தன்னில் சுக்கான்
மாத்தியே தான்முடுக்கி வடத்தைமாட்டி வகையுடனே நாலாங்கால் மச்சிதமே

விளக்கவுரை :


1934. தாமேதான் மச்சியது வறுபத்துநான்கு தாழ்வான வாசலது நூற்றிருபத்தெட்டு
போமேதா னிருபக்கங்கதவுமாகும் பொக்கான வாலதுவுள் கதவுகொண்டு
வேமேதான் சங்கிலியு மள்ளுமாட்டி மேலான சன்னல்களுக்குறுதியாணி
நாமேதான் நினைத்தவண்ணம் முடித்தேனப்பா நலமாக சுற்றெங்கும் கிராதிதானே

விளக்கவுரை :


1935. கிராதியமா மிருமூலை சுக்கான்போட்டு கீர்த்தியுடன் அஞ்சாங்கால் மச்சுமாக்கி
தராதிபரும் தானிருக்க மச்சுமாகி தாழ்வான யடிவாரம் சுரங்கம்போலாம்
நிராதியுட னறுபத்திநான்குமாளி நிர்மித்து பலகையுடன் சட்டமாட்டி
பராதியுடன் சன்னல்கள் மிகவுண்டாக்கி பக்கமெல்லாம் சூத்திரமாம் பலகைதானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar