1936. பலகையா மறுபத்து நாலுவாசல்
பாங்குடனே சீர்திருத்தி வுள்ளேசட்டம்
நிலைமையுடன் இருபக்கம்
வாசல்விட்டு நிவர்த்தியுடன் சுற்றிலுமே கதவமைத்து
பலகையுடன் சட்டமதால்
பலகைமாட்டி மார்க்கமுடன் காற்றதுவும் வொடுங்கிநிற்க
சலகையுடன் கிராதிகளில்
கண்ணாடியாலே சாங்கமுடன் வாசல்வழி நூற்றிருபத்தெட்டே
விளக்கவுரை :
1937. எட்டான மேலவாசல் சன்னலாகும்
மெழிலான வைந்தாங்கால் மச்சுயாக்கி
திட்டான மாளிகையா
மறுபத்திநாலு திடமான கோட்டையது நூற்றிருபத்தெட்டு
மட்டான வழிகளிலே
சூத்திரங்கள் மாட்டி மகத்தான கிராதிகளில் பிரதமைகளமைத்து
வட்டான வாசலு
நெடுவாசல்வட்டம் வகுப்புடனே யிரும்புகம்பி யிருத்துநான்கே
விளக்கவுரை :
[ads-post]
1938. நாலான குழாவதுவுமிருத்துநாலு
நலமாக கீழுவரை வூணிமிகநாட்டி
காலான குத்துக்கால்
யிரும்புவட சட்டம் கதிரான வாணிகளால் கொண்டுமிக முடுக்கி
மேலான நீளவரை
முக்காலுமட்டும் நெடுஞ்சட்டம் கீழ்வட்டம் மிகக்கொண்டுநிறுத்தி
கோலான பக்கமெல்லாம்
இரும்புக்கால்மாட்டி கொடிதான சுக்கானுங் குழைபக்கந்தானே
விளக்கவுரை :
1939. பக்கமுடன்
மேலரைவூடுருகமாட்டி படிவுடனே வாராங்கால் மச்சிவீடப்பா
நிக்கயிடமிருப்பதற்கு
யிருபுரமுமாணி நிரமித்து சுக்கானை வடங்கொண்டு திருப்ப
சுக்கனிட னிருபக்கம்
சங்கிலியால் மாட்டி சுழலான நடுமைய மிருபக்கந்தானும்
தக்கபடி வுள்ளுருளை
யிரும்புகுழல்தானும் சமைத்திட்டேன் தலைபுரத்தில் வக்கினியுமாச்சே
விளக்கவுரை :
1940. மாச்சப்பா யிடப்பக்கம்
தண்ணியதுநிற்க அப்பனே குழலொன்று சமைத்திட்டேன்யானும்
மூச்சப்பா போகாமல்
குழைகளுக்கும் புக்குமுளையான தண்ணீரும் கொதிக்குமிகவேளை
வாச்சமுடன் தான்திறந்து
தண்ணீருமாவி மற்றுமுள்ள குழைகளுக்கு தானருந்தியோட
காச்ச நீராவிகுழல்
தனிலேபுகுந்து கருவான சக்கரத்தை திருப்பமிகலாச்சே
விளக்கவுரை :