1941. திருப்புகையில் சக்கரமும் சுக்கானும்கொண்டு திறமுடனே ஏழாங்கால் மச்சியதுநின்று
பொருப்புடனே வாணிதனை
தட்டிப்போட்டேன் பொங்கமுடன் மரக்கலமும் நிற்கலாச்சே
தருக்கலுடன்
கல்லாணிகொண்டுமாட்டி தகைமைபெற மரக்கலத்தை நிறுத்தியானும்
குருக்கலுடன் புகையடக்கி
நங்கூரத்தைக் குறுக்கிடவே கடைசிமுனைமாட்டிட்டேனே
விளக்கவுரை :
1942. மாட்டினேன் சக்கரமு
மெட்டதாகும் மாற்கமுடன் வுள்ளாணி யச்சியாணி
நாட்டியே துளைகொண்டு
தாண்முடுக்கி நலமாகச்சக்கரம் சட்டிபூட்டி
வாட்டமுடன் மரக்கலம்
மத்திவாசல் வழியுடனே தாளணிந்து வாணிமாட்டி
தேட்டிமுடன் மேல்வரை
கீழ்வரைமட்டும் தேரினது சக்கரம்போல் சட்டமாமே
விளக்கவுரை :
[ads-post]
1943. சக்கரமாம் வுள்வரிசை
நெடுவரிசையாவும் சட்டமுடன் பிகுவெடுத்து வாணித்தன்னால்
பக்கமெலாம் குழாய்களுக்கு
கம்பிமாட்டி பாங்குபெற வுள்ளாவி வூடுதாக்க
நெக்கவிடமில்லாமல்
புகைகள்நிற்க நேராகக் குழல்பினலில் முடுக்கிவிட்டு
தக்கபடி நீராவி
நிதானம்பார்த்து தந்திரமாய் சூத்திரமுண்டாக்கினேனே
விளக்கவுரை :
1944. ஆக்கமுடன் கப்பலொன்று
நேமித்தேதான் அதின்மேலே வெகுஜனங்கள் ஏத்திவிட்டேன்
மார்க்கமுடன் சித்தர்முனி
ரிஷிகள் தம்மை பாங்குபெற மேலவரை யேற்றிவிட்டேன்
நோக்கமுடன் மேல்வரையில்
நானிருந்தேன் நோட்டமுடன் சுக்கானை முடுக்கிவிட்டு
சோக்கமுடன்
கடலேழுஞ்சுத்திவந்து சூட்சமுடன் கப்பலதை நிறுத்தினேனே
விளக்கவுரை :
1945. நிறுத்தினேன் சீனபதிக்
கடலோரந்தான் நேர்புடனே சித்தர்முனி ரிஷிகள்தாமும்
திருத்தமுடன் தானிரங்கி
யாசீர்மத்தில் சிறப்பாக சென்றுவிட்டார் ஜனங்களெல்லாம்
பெருத்தமுடன் சுக்கானை
முடுக்கியானும் பொங்கமுடன் சீனபதிக்கடலைவிட்டு
வருத்தமுடன் இமயகிரி
யோரப்பக்கம் வாகுடனே சென்றுமல்லோ நிறுத்தினேனே
விளக்கவுரை :