போகர் சப்தகாண்டம் 1946 - 1950 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1946 - 1950 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1946. நிறுத்தினேன் இமயகிரி யோரந்தன்னில் நிலையான சித்தர்முனி ரிஷிகளெல்லாம்
திருத்தமுடன் கப்பலில்யேத்தியானும் சென்றேனேயானுமல்லோ கடல்மார்க்கம்தான்
ஒருத்தமுடன் உலகமெங்கும் சுற்றிவந்தேன் ஓகோகோநாதாக்கள் மெச்சயானும்
நிருத்தமுடன் இமயகிரியோரந்தன்னில் னேமமுன் மறுபடியும் வந்திட்டேனே

விளக்கவுரை :


1947. வந்திட்டேன் மேருகிரி பர்வதந்தன்னில் வாகுடனே சித்தர்களை யிறக்கிவிட்டேன்
தந்திட்டார் எந்தனுக்கு மெச்சியேதான் தாரணியில் தீதமென்ற வித்தையெல்லாம்
முந்திட்ட யெந்தனுக்கு கிருபைவந்து மோசமில்லை யென்றுசொல்லி யுபதேசித்தார்
பந்திட்ட யெந்தனுக்கு பட்சம்வைத்து பாலித்தார் வெகுகோடி வித்தைதானே  

விளக்கவுரை :

[ads-post]

1948. தானான வித்தைகளும் அனேகங்கொண்டேன் தாக்கான வினோதமென்ற மார்க்கமெல்லாம்
கோனான குருவருளால் தன்னைபோற்றி கூர்மையுடன் தான்வணங்கி நின்றேன்யானும்
வேனான காலாங்கிநாதர்தாமும் விருப்பமுடன் யென்மீது பட்சம்வைத்து
தேனான வமிர்தரச குளிகைதன்னை தெளிவுடனே யிருக்குமிடஞ் செப்பினாரே

விளக்கவுரை :


1949. செப்பினாரெந்தனுக்கு காலாங்கிதாமும் தேற்றமுடன் வளப்பமெல்லாம் கண்டுகொண்டேன்
ஒப்பமுடன் வமிர்தரச குளிகைசெய்து ஒழுங்குபெற சீனபதிமாந்தருக்கு
தப்பிதங்கள் இல்லாமல் முடித்துயானும் சார்புடனே தந்துவிட்டேன் மைந்தாகேளு
நெப்பமுடன் வெள்ளையென்ற மாந்தருக்கு நேர்புடனே கற்பித்தேன் கோடிதானே
.
விளக்கவுரை :


1950. கோடான கோடிமுறை யனந்தஞ்சொன்னேன் கூறினேன் நாதாக்கள் கூறாவன்மை
பாடான பாட்டர் திருமூலத்தார்கள் பாடினார் முன்பின்னாய்ப் பாடிப்போட்டார்
தேடான பொருளெல்லாம் தேடிக்காண தெளியாது யவர்நூலில் ஒன்றுங்காணா
மாடான மனிதரப்பா வறியாமற்றான் மானிலத்தில் சாத்தரத்தைப் பொய்யென்றாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar