1951. பொய்யென்றார் சாத்திரங்கள்
மறைவுகாணார் பூதலத்தில் கெட்டலைந்து நூலைக்காணார்
மெய்யென்ற நூலதனைக்காணார்
மாண்பர் மேதினியில் மாண்பர்களே சொல்லப்போமோ
கைகண்ட சாத்திரத்தின்
வுளவுகாணார் காசினியில் நூல்பார்த்து சலித்துபோனார்
நெய்யென்ற ருசிபாகந்
தெரியாமற்றான் நிம்பெண்ணையுண்டதொரு கதைபோலாச்சே
விளக்கவுரை :
1952. ஆச்சப்பா இன்னமொரு
கருமானங்கேள் அப்பனே யாம்கண்ட மார்க்கஞ் சொல்வோம்
போச்சப்பா மணலிருப்பு
கொண்டுவந்து பேரான சரவுலையில் பழுக்கக்காய்ச்சு
நேச்சென்ற சம்மட்டி
மட்டங்கொண்டு நெருப்பான வதடுடனே சரடுபோக்கி
கூச்சன்ற மணலிரும்பு
காச்சடித்துக் குறையாமல் சேத்தளத்தில்பாதிகாணே
விளக்கவுரை :
[ads-post]
1953. காணவே வயமதுதான் கவனைபோலாம்
கசடற்ற வெள்ளிதனக்கொப்பதாகும்
மாணவே வாரடித்து
நீட்டிப்பின்பு மார்க்கமுடன் சேரதுதான் ராவிமைந்தா
தோணவே சரக்கதுதான்
சுத்திகேளும் துறையான பழச்சாற்றில் நாலுநாளும்
வேணவே திரிபலாதி
கஷாயத்தாட்டி விருப்பமுடன் தானரைப்பாய் சாமம்நாலே
விளக்கவுரை :
1954. நாலான சாமமது வாட்டிப்பின்பு
நலமுடனே குடோரியது வெண்காரந்தான்
பாலான வயல்நண்டு வரப்புநண்டு
பாகமுடன் பாலெடுத்து வெண்காரத்தை
நூலான நூல்படியே
தெளிந்துயானும் நுணுக்கமுடன் தானரைத்து வயத்திலூட்டி
வேலான குடோரியென்ற காரந்தன்னால்
விருப்பமுடன் தான்பிசறி மூசைக்கேற்றே
விளக்கவுரை :
1955. ஏற்றவே வச்சிரமாங்
குகையில்வைத்து யெழிலான சீலையது வலுவாய்ச்செய்து
போற்றியே ரவிதனிலே காயவைத்து
புகழாக சரவுலையில் வைத்துவூது
நாற்றமென்ற கசடதுவும்
மிகவேநீங்கி நலமான வயமதுவும் வட்டுப்போலாம்
கூற்றனென்னும் வெண்காரக்
குடோரியாலே குணமான வயமதுவும் வெளுமைபாரே
விளக்கவுரை :