1956. பாரென்ற வயமதுவும்
துய்யானாகும் பாங்கான குடோரியது கட்டுமார்க்கம்
நேரென்ற துருசதுவும்
அயத்திற்பாதி நெடிதான துருசுக்குபாதி கெந்தி
மேரேதான் கெந்திக்கு
பாதிசூதம் மேலான சூதத்தில் பாதிவீரம்
சேரென்ற வீரத்தில் பாதிபூரம்
செயமான பூரத்தில் பாதிதானே
விளக்கவுரை :
1957. பாதியாம் பூரத்தில் பாதிதாரம் பாங்கான தாரத்தில் பாதிதுத்தம்
சோதியாம் துத்தத்தில் பாதி
சீனம் சுடரான சீனத்தில் பாதிவாளம்
வாதியாம் வாளத்தில்
பாதியுப்பு வாகான வுப்பிலே பாதிபூநீர்
நீதியா மித்தனையு
மொன்றாய்க்கூட்டி நினைவாக வாறுவகை செயநீராட்டே
விளக்கவுரை :
[ads-post]
1958. ஆட்டவென்றால் மெழுகதுவும்
நாலுசாமம் அப்பனே மைபோலவரைத்துமைந்தா
நீட்டமுடன் சிமிழ்தனிலே
பதனம்பண்ணு நிலையான குடோரியது சொல்லப்போமோ
வாட்டமுடன் வெள்ளிசெம்பில்
பத்துக்கொன்று வலுமையுடன் தானுருக்கி குடோரியொன்று
நேட்டமுடன் வுருக்குமுகந்
தன்னிலீய நிகரான களங்கமது போலாம்பாரே
விளக்கவுரை :
1959. பாரப்பா களங்குதனை யோட்டிலூத
பாங்குபெற தகட்டித்துப் புடத்தைப்போடு
நேரப்பா புடமாறி
யெடுத்துப்பாரு நேற்பான செம்பதுவும் நீங்கியேதான்
வேரப்பா வெள்ளியது
யெடையேநின்று விரைவான மாற்றதுவு மாறுகாணும்
மாரப்பா தங்கமென்ற காசிதானும்
மகிழ்வாக நாலுக்கு வொன்று சேரே
விளக்கவுரை :
1960. ஒன்றாகத் தான்கூட்டி
மைந்தாபாரு வுத்தமனே வாரடித்துப் புடத்தைப்போடு
குன்றான புடமதுவில்
மாற்றுகாணும் கூரான செம்பொன்னோ சொல்லப்போமோ
தன்றான பொன்னதுவும்
சித்தர்வேதை சாங்கமுடன் மானிடரால் செய்யப்போமோ
பன்றான சாத்திரங்கள்
மிகவாராய்ந்து பாடினேன் போகரிஷி பண்பாய்த்தானே
விளக்கவுரை :