1961. தானான வின்னமொரு வயணங்கேளு
தயவான வெடியுப்பு யிந்துப்பாகும்
மானான கரியுப்பு வளையலுப்பு
மகத்தான சவிட்டுப்புக் கல்லுப்பாகும்
கானான காய்ச்சுப்பு
கெந்தியுப்பு கருவான அட்டுப்பு பாறையுப்பு
வேனான படிகாரம்
வெண்காரந்தான் விதர்ப்பான யெரிகாலனுப்புமாமே
விளக்கவுரை :
1962. உப்பான மேனியுட வுப்புமாகும்
ஒளிவான பூநீறுமுப்புமாகும்
வைப்பான துருசுடனே
துத்தமாகும் மார்க்கமுடனிதுவெல்லாம் ஒன்றாய்க்கூட்டி
மெப்பான கல்வமதில்
இட்டுமைந்தா மேன்மையுடன் சமனிடையாய் நிறுத்துப்போடு
ஒப்பான மேனியிட மூலிசாற்றால்
ஓங்குபெற தானரைப்பாய் சாமமெட்டே
விளக்கவுரை :
[ads-post]
1963. எட்டான சாமமது வரைத்தபோது
யெழிலான பில்லையது செய்துகொண்டு
மட்டான வகலில்வைத்து
சீலைசெய்து மயங்காமல் ரவிதனிலே காயவைத்து
திட்டான கோழியென்ற
புடத்தைப்போடு தீயாறியெடுத்துப்பார் சிவப்போகொஞ்சம்
வட்டான பில்லையது கல்வமிட்டு
வளமுடனே மேனியின் சாற்றாலாட்டே
விளக்கவுரை :
1964. ஆட்டவென்றால் மேனிச்சார்
புடமோபத்து அப்பனே முன்போல புடத்தைப்போடு
வாட்டமுடன் புடமதுவும்
தீர்ந்தபின்பு வாகான குமரியிட சாற்றாலாட்டு
நாட்டமுடன் பத்துபுடம்
குமரிச்சாற்றால் நலமுடனே போட்டபின் மைந்தாகேளு
நீட்டமுடன் கையானின்
சாற்றாலப்பா நினைவாகப் பத்துபுடம் போட்டிடாயே
விளக்கவுரை :
1965. போடவே முப்பத்தும் தீர்ந்தபின்பு பொங்கமுடன் புளியாரைச் சாற்றால்மைந்தா
கூடவே பத்துபுடம்
முன்போல்போடு குறையாமல் கோழியென்ற புடமேயாகும்
நீடவே நொச்சிலையின்
சாற்றாலாட்டி நீட்டமுடன் பில்லையது செய்துகொண்டு
வாடவே சில்லிட்டுச்
சீலைசெய்து வளமாக முன்போல பத்துபுடம்போடே
விளக்கவுரை :