போகர் சப்தகாண்டம் 1966 - 1970 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1966 - 1970 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1966. போட்டவுடன் பில்லையது சிவப்புமெத்த போக்கான வுப்புடனே சூதஞ்சேர்த்து
வாட்டமுடன் வாறுவகைசெயநீர்தன்னால் வளமாகத்தானரைத்து பில்லைதட்டி
நீட்டமுடன் ரவிதனிலே காயவைத்து நேர்புடனே சில்லிட்டுச் செய்துகொண்டு
தேட்டமுடன் கோழியென்ற புடத்தைப்போடு தெளிவான செந்தூரமாகுந்தானே

விளக்கவுரை :


1967. தானான செந்தூரம் வெள்ளிசெம்பில் தாழ்மையுடன் பத்துக்கு ஒன்றுபோடு
மானான கரியோட்டிலூதிப்போடு மயங்காதே வெள்ளியென்ற பிடைதான்காணும்
வேனான செம்பதுவும் நீங்கியல்லோ விரைவான வெள்ளியது பசுமைகாணும்
போனான குருவருளை சதாநித்தந்தான் குணமுடனே போற்றிசெய்து வாழ்குவாயே

விளக்கவுரை :

[ads-post]

1968. வாழ்கவென்றா லின்னமொரு கருமானங்கேள் வாகான செந்தூரம் மண்டலந்தான்
நீழ்கவென்றால் தேகமது வுளுப்புராது நீணலித்தில் எப்போதுமிருக்கலாகும்
தாழ்கவென்றால் தேகமது மழியாதாகும் சதாகாலம் கற்பமுண்டார்க் கொப்பாவார்பார்
மூழ்கவென்றால் தயிலமது செப்பக்கஏளும் முளையான பாகமது வுரைப்போம்தாமே

விளக்கவுரை :


1969. தாமேதான் யெள்ளெண்ணைப் படிதானொன்று சரியான முத்தெண்ணைப் படிதானொன்று
காமேதான் பசுநெய்யும் படிதானொன்று கருவான வழிஞ்சியுட தயிலம்கால்தான்
வேமேதான் விராலியிட தயிலமப்பா வீரான சிவனாரின் தயிலம்கால்தான்
நாமேதான் வாலுழுவைத் தயிலங்கால்தான் நலமான கருஞ்சீரந் தயிலங்கூட்டே

விளக்கவுரை :


1970. கூட்டவே மூலிவகை சொல்லக்கேளும் கொடிதான வேலியிட மூலிச்சாறும்
நீட்டமுடன் தைவேளை சாறுங்கூட்டி நெடிதான குமரியிட சாறும்சேரு
காட்டமென்ற வல்லாரைச் சாருஞ்சேர்த்துக் கருவான கையானின் சாறும்கூட்டு
தேட்டமென்ற பொடுதலையின் சாறுங்கூட்டி தெளிவான ஆதண்டைச் சாறுசேரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar