1971. சேர்க்கவே சாறொன்று நாழியாக
சீர்பெறவே தானிடித்து ஒக்கச்சேர்த்து
ஏற்கவே யெண்ணெயுடன்
தான்கலந்து யெழிலாக கற்கவகை சொல்லக்கேளு
பார்க்கவே கடுக்காயும்
தான்றிக்காயும் பண்பான மாசியென்ற காயுங்கூட்டி
மார்க்கமுடன் மிளகுடனே
நெல்லிக்காயும் மதிப்பான தேசாரமோமங்கூட்டே
விளக்கவுரை :
1972. ஓமமுடன் கற்கடக சிங்கியப்பா
வுத்தமனே கஸ்தூரி மஞ்சளப்பா
நேமமென்ற செம்பூரான்
பட்டைதானும் நேர்த்தியாய் பூலாவின் கிழங்குகூட்டி
தாமமென்ற கோஷ்டமென்னும்
சார்ந்துபூரல் தனியான வேப்பரிசி சீரங்கூட்டி
நாமென்ற அகிற்கட்டை
சந்தனமுஞ்சேர்த்து நலமுடனே தானரைப்பாய் பசுப்பாலுதாமே
விளக்கவுரை :
[ads-post]
1973. பாலான சரக்குகளில் பலமொன்றதாக பாகமுடன் தானரைப்பாய் சரக்கெல்லாந்தான்
மேலான எண்ணெய்தனில்
கலரவிட்டு விருப்பமுட னடுப்பேற்றி தானெரிப்பாய்
நூலான நூற்படியே முறைபோல்
காய்ச்சி நுணுக்கமுடன் மெழுகுபத மிறக்கியப்பா
சேலான கெம்பதமா
வடித்துமேதான் செவ்வையுடன் தாளிதனை யிறக்கிடாயே
விளக்கவுரை :
1974. இறக்கிடவே காலாங்கிதனை
நினைத்து யென்மகனே சீஷசவிலடக்கஞ்செய்து
முறக்கமுடன் தயிலமது
முழுகிவந்தால் மூட்டோடே வியாதிகளு மற்றுமேதான்
திறக்கமுடன் கண்ணிரண்டும்
வரிதிகூசா தெளிவுடனே வருந்தூதி பகலிற்தோன்றும்
சிறக்கவே போகரிஷி
பலநூல்பார்த்து சிறப்புடனே பாடிவைத்தேன் புவியுள்ளோர்க்கே
விளக்கவுரை :
1975. புவியான மாந்தர்களில்
கருவாளியுண்டு புத்தியுள்ளான் கண்டறிவாம் திறப்புமார்க்கம்
கவியான பாடல்களின்
மறைவுகாணான் கண்டவன்போல் பேசுவான் கழுதைமாண்மன்
நபியானக் கடவுளுக்
கொலயாஞ்சித்தர் நவின்றிட்ட நூல்களையே பழிப்புஞ்சொல்வான்
அபிமான மில்லாமல்
திட்டிப்பேசி அழிந்திடுவான் படைநரகில் பாவியாமே
விளக்கவுரை :