1976. பாவியாம் முழுமூடப்பாவியப்பா
பரிசுத்தவான் மாவைப்பகடிசெய்வான்
காவியங்களுள்ளதொரு
மறைப்புகாணான் கண்டறிந்து கற்றவன்போல் பினத்துவான்பார்
ஆவியுடன் தானடங்கும்
வழியுங்காணான் அதற்கப்பால் கடந்ததொரு ஞானிபோல
சாவியென்னும் பொக்கிஷத்தைக்கைவிடாமல்
சதாகாலம் காசுபணப்பிசாசியாமே
விளக்கவுரை :
1977. பணங்கொண்ட பாவியவன்
மிகவும்பேசி பாங்கியர்மேலெண்ணமதிகங்கொண்டு
பிணம்போல பிரண்டழுதுபோவான்
பாவிபின்னொன்று காணமாட்டான் பேடிமாண்பன்
மனங்கொண்ட பெரியோரை
தூஷித்தேதான் மார்க்கமெல்லாங் கண்டவன்போல் அதிகப்பேச்சு
குணமில்லாச்
சண்டாளப்பாவியாவான் குடிகெடுத்து வெகுபேரைச் சுடச்சொல்வானே
விளக்கவுரை :
[ads-post]
1978. சொல்வானே சித்தர்கள்மேல்
தோஷஞ்சொல்வான் சுருதிமுதல் சூத்திரங்கள் குற்றஞ்சொல்லி
வெல்வான வெகுவாகப்பேசிப்பேசி
வீண்கதையாஞ் சாத்திரங்கள் பொய்யேயென்பான்
புல்வானே சித்தர்முனி
கைமறைப்பை புத்தியுடன் படியாமல் தாறுமாறாய்
தொல்லுலகில் பாடல்முறை
யொன்றிருக்கச் சுட்டுகெட்டு நூலைமிகத் தப்பென்றானே
விளக்கவுரை :
1979. தப்பென்று சொன்னதொரு
பாவிகட்டு தப்பாமல் சிரசதுவும் வெடித்துப்போகும்
ஒப்பமுடன் சித்தர்முனி
நூல்கள்தாமும் ஒருக்காலும் பொய்யாது மெய்யேயாகும்
செப்பரிய ரிஷிகளெல்லாம்
நூல்கள்கோர்வை தேசத்தில் மானிடர்கள் பிழைக்கவென்று
மெப்பமுட றாமுரைத்தா
ருண்மையாக மேதினியில் மாந்தர்கட்கு யுரைத்திடாரே
விளக்கவுரை :
1980. உரைத்திட்டேன்
போகரிஷிநூல்கள் பார்த்தால் ஓகோகோ யாதொன்றும் பொய்யுமாகா
நிரைத்திட்டேன் கோர்வைகளி
லனந்தஞ்சொன்னேன் நீடூழிகாலம்வரை நூலைப்பார்த்தால்
குறையொன்றும் வாராது
போகர்நூலில் குறைசொன்னாலப்போதே தலைதான்போகும்
முறைபோல செய்து
மிகமுறையைப்பார்த்து மோசம்வரில் தோஷமது மிகசொல்வீரே
விளக்கவுரை :