போகர் சப்தகாண்டம் 1981 - 1985 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1981 - 1985 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1981. சொல்லவென்றால் நாவேதுபாவுமேது சூட்சமுட னின்னமொரு விபரங்கேளு
புல்லவே வகஸ்தியனார் சதுர்காண்டத்தில் பூட்டினார் கருமான வுளவுமெத்த
வெல்லவே காண்டம்பனிரெண்டு காண்டம்விபரித்தார் பன்னீராயிரத்தில்
மெல்லவே கொட்டிவிட்டார் கோடிபாணம் மேதினியி லாரறிவார் அன்னூல்தானே

விளக்கவுரை :


1982. தானேதான் சாத்திரத்தில் எண்ணூர்கண்டேன் தனியான நாலுமறுநூறும் பார்த்தேன்
மானேதான் காவியங்கள் வைந்தும் பார்த்தேன் மகத்தான வெண்ணூறு வதீதம் பார்த்தேன்
வேனேதான் சௌமியங்கள் எட்டும்பார்த்தேன் வேதாந்தக்காவியங்கள் ஆறும்பார்த்தேன்
தேனேதான் பலதிரட்டுக் கோர்வைநாலுந் தெளிவான சாலமது எட்டுயெட்டே

விளக்கவுரை :

[ads-post]

1983. எட்டான திருமந்திரம் நாலுகோர்வை கட்டான தீட்சைகளில் பத்துகோர்வை
கருவான மாந்திரீகக் கோர்வைபத்து
வட்டான முப்புவகை சாத்தரம் நூறு மதிப்பான வைத்தியத்தில் கோர்வைநூறு
திட்டான சொச்சசூத்திரத்தின் கோர்வை திருட்டுதனில் நூறுவகை பார்த்திட்டேனே

விளக்கவுரை :


1984. பார்த்திட்டேன் இதுகளெல்லாம் சேர்ந்துமல்லோ பாடிவைத்தார் பாடல்களுமிரண்டுலட்சம்
சேர்த்திட்ட மூலாதாரத்தின் கோர்வை சிறப்புள்ள கோர்வையிது காரணங்கள் 
மார்த்திட்ட வின்னமனே கங்கள்கோர்வை மார்க்கமுடன் பாடிவிட்டார் லட்சமப்பா
பூர்த்திட்டமானகருமானமெல்லாம் புகழுடனே கண்டுதெளிந்தாராய்ந்தேனே

விளக்கவுரை :


1985. ஆராய்ந்தேன் தன்வந்திரி நூலைக்கண்டேன் ஆகமாங்காவியங்கள் ஐந்துங்கண்டேன்
பூராயமானதொரு காண்டம்நாலு புகழான கோர்வையது பதினாறாகும்
தோராயமுள்ளதொரு கிரந்தம்நூறு தொகுப்புடன் பாடல்வகை இரண்டுலட்சம்
நேரான சில்லரையில் அனந்தங்கோர்வை நெடிதான தொகுப்புகளில் லட்சமாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar