போகர் சப்தகாண்டம் 1986 - 1990 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1986 - 1990 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1986. லட்சமுட னின்னம்வெகு போக்குநூலாம் லக்கில்லைகணக்கில்லை மெத்தவுண்டு
பட்சமுடன் வவர்நூலில் பலவார்கோர்வை பார்வையிட்டேன் சிலகோடி நூல்களப்பா
மச்சமுனி சாஸ்திரங்கள் தொகுப்பு சொல்வேன் மார்க்கமென்ற மெண்ணூறு எட்டுகோர்வை
சொச்சமென்ற சூஸ்திரங்கள் இருநூறாகும் சுருதிமுதல் பெருநூலாயிரந்தானாமே

விளக்கவுரை :


1987. நாலான காண்டமது எட்டுமாகும் நலமான கோர்வையது பதினாறாகும்
வாலான சிறுநூலாம் கோர்வைநூறு வகுப்பான திரட்டுநூல் முப்பத்திரண்டு
சேலான ஞானநூல் இருபத்திநாலு சிறப்பான காவியங்க ளெட்டுமாகும்
தூலான நூல்களிது பலநூலாகும் நுணுக்கமுடன் ஆராய்ந்தேன் போகர்தானே

விளக்கவுரை :

[ads-post]

1988. நானான சட்டமுனி நூல்கள்பார்த்தேன் நயமுடனே பெருநூலாம் எட்டுக்கோர்வை
வேனான திரட்டுகளில் கோர்வைபத்து வெளியான தீட்சைகளில் கோர்வைநூறு
பானான பாடல்களுமொன்று துவக்கிப் பாடினார்வெகுநூல்கள் வனந்தமார்க்கம்
தேனான இருநூறு யெட்டுசொன்னார் தெளிமையுடன் கருவூராருரைத்தார்பாரே

விளக்கவுரை :


1989. பாரேதான் முன்னூறில் நாலுகோர்வை பாங்கான திரட்டுகளில் யெட்டுகோர்வை
நேரேதான் காவியத்தி லிரண்டுகண்டேன் நெடிதான சூத்திரத்தில் பத்துகோர்வை
மேரேதான் தீட்சைகளில் சோடசமுமாகும் மேலான சுருக்கமது கோர்வையிருபத்து
தீரேதான் சின்னநூலனந்தங்கோர்வை திறமுடனே கண்டேனே வதிதங்கள்தானே

விளக்கவுரை :


1990. தானான ரோமரிஷி நூல்கள் கண்டேன் தாக்கான பரிபாஷை கோர்வைநாலு
மானான பெருநூல் காவியங்களெட்டு மார்க்கமுடன் திரட்டுகளில் பதினாராகும்
வேனான தீட்சைகளில் யெட்டுகாண்டம் வெளியான காண்டத்துக்காயிரந்தான்
பானான பலதிரட்டு பத்துக்கோர்வை பாடிவிட்டார் சில்லரையில் முன்னூராமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar