1991. முந்நூறாங் கோர்வைகளில்
அனந்தஞ்சொன்னார் முனையான திரட்டுகளில் கோர்வைபத்து
நந்நூராம் கோர்வைகளில்
நாலுகோர்வை நலமான தீட்சைகளில் பத்துக்கோர்வை
பந்நூலாம் சாத்திரங்கள்
பலவுஞ்சொன்னார் பாடிவிட்டார் வெகுகோடி யனந்தமார்க்கம்
அந்நூலுங்கண்டு
தெளிந்தாராய்ந்தேதான் அன்புடனே பாடினே னேழாயிரந்தாமே
விளக்கவுரை :
1992. தாமேதானஃ கொங்கணவர்
நூலைக்கண்டேன் தாறுமாறாகவல்லோ பாடிவிட்டார்
யாமேதான் பெருநூலு
எட்டுகண்டேன் பொங்கமுடன் தீட்சைநூல் பத்துகண்டேன்
வேமேதான் கடைக்காண்டம்
நாலுகண்டேன் மிக்கான நடுக்காண்டம் ஒன்றுகண்டேன்
நாமேதான் கண்டபடி
யாருங்காணார் நலமுடனே வின்னம்பல சித்தர்தாமே
விளக்கவுரை :
[ads-post]
1993. சித்தான புண்ணாக்கர்
அனேகஞ்சொன்னார் சிறப்பான கமலமுனி யனேகஞ்சொன்னார்
முத்தான புலத்தியரு
மனேகஞ்சொன்னார் முனையான சிவவாக்கிய ரனேகஞ்சொன்னார்
சுத்தான
சுந்தரனாரனேகஞ்சொன்னார் சுருதிமுதல் பெருநூலாங் கண்டேன்யானும்
நித்தான விராமமுனி
யனேகஞ்சொன்னார் நீடூழிசாத்திரங்கள் கண்டிட்டேனே
விளக்கவுரை :
1994. கண்டிட்டேன் யாக்கோபு
நூலுங்கண்டேன் கருவான டமரகனார் நூலும்பார்த்தேன்
தூண்டிட்ட வரரிஷியார்
நூலும்பார்த்தேன் துரைராஜர் வேதமுனி நூலும்பார்த்தேன்
கொண்டிட்ட வள்ளுவனார்
நூலுங்கண்டேன் கூரான நந்தியுட நூலுங்கண்டேன்
வெண்டிட்ட சதாநந்தர்
நூலும்பார்த்தேன் றெளியானபிரமமுனி நூல்பார்த்தேனே
விளக்கவுரை :
1995. பார்த்தேனே யின்னம்வெகு
சித்தர்நூலும் பலபலவாங்கண்டறிந்தேன் நுணுக்கந்தன்னை
தீர்த்தேனே நவகோடி
ரிஷிகள்தாமும் திறமுடனே வனேகநூல் பாடிவிட்டார்
சேர்த்ததொரு பதிணெண்பேர் சித்தர்தாமும்
சிறப்புடைய நூலெல்லாம் தெளிந்துபார்த்தேன்
நேர்த்தியுடன்
காலாங்கிபாதம்போற்றி நேர்மையுடன் பாடினேன் ஏழாயிரந்தானே
விளக்கவுரை :