1996. தானான காவியந்தான்
சத்தகாண்டம் தயவுடனே ஏழுலட்சம் கிரந்தந்தன்னை
வேனான நூல்பார்த்து
வுளவுகண்டு விருப்பமுடன் பாடிவைத்தேன் ஏழுகாண்டம்
மானான மறைப்புமத
லில்லாமற்றான் மாற்கமுடன் மனிதர்பேரில் பட்சம்வைத்து
கோனான குருவருளால்
காலாங்கிதம்மைக் குறிப்புடனே சரணமிட்டுப் பாடினேனே
விளக்கவுரை :
1997. பாடினேன் நாலுயுக வதிசயங்கள்யாவும் பார்வைக்கு யெளிமைதனில் காண்பதற்கு
நீடியதோர் கருவெல்லாங்
காணவென்று நேர்மையுடன் சீனபதியானுஞ்சென்று
கூடியதோர் விளையாட்டு
யெல்லாம்பார்த்து கூறினேன் வெள்ளையென்ற மாந்தருக்கு
தேடியே அலையாமற்
பொருள்களெல்லாம் திரவியங்கள் கிட்டுதற்கு மொழிந்திட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
1998. மொழிந்திட்டேன்
யேழாயிரக்கோர்வைநூலில் முறைப்படியே யாம்சொன்னவதீதமார்க்கம்
பழிந்திட்ட சித்தர்களுஞ்
சொல்லவில்லை பாரினிலே சொன்னாலுங்காணமாட்டார்
வழிந்திட்ட சூத்திரங்கள்
கைமறைப்பு வளமுடனே பாடிவைத்தேன் மாந்தர்க்காக
குறிந்திட்ட
சூட்சாதிசூட்சமார்க்கம் குறையாமல் பாடிவைத்தேன் பண்பதாமே
விளக்கவுரை :
1999. பண்பான யேழாயிரக்காவியந்தான்
பாரினிலே சித்தர்முனி ரிஷிகள்தாமும்
நண்பாக மெச்சியல்லோ
வதீதஞ்சொன்னார் நாதாக்கள் கைமறைப்பு நடுவீதியாச்சு
திண்பான நூலதனை
குகைக்குள்வைத்து சிறப்புடனே பூசையது மிகவுஞ்செய்தார்
கண்பான பெருநூலேழாயிரந்தான்
கனமுடனே சித்தரெல்லாம் விரும்பிட்டாரே
விளக்கவுரை :
2000. விரும்பவே காண்டமது
ஏழுஞ்சொன்னேன் வெளியாகக் கருவெல்லாந் திறந்துபோட்டேன்
துரும்புமுத லொளிக்கவில்லை
சீனத்தார்க்கு துப்புரவாயுரைத்துவிட்டேன் பட்சம்வைத்து
கரும்புபோல்
ஏழாயிரக்காவியந்தான் கருத்துடனே பாடிவிட்டேன் மாந்தர்கப்பா
அரும்பொன் மனிதனைப்போல்
இரண்டாங்காண்டம் அப்பனே முத்துமது முற்றதாமே
விளக்கவுரை :