2001. அண்டபராபரமான முதலேகாப்பு அடியேனுங்காலாங்கிநாதர் பதங்காப்பு
புகன்றுநின்ற
காலாங்கிகுருபதமே காப்பு புகழான வல்லமுனி சித்தர்பதங்காப்பு
தகன்றபெரியோர் ஞானிதான்
பதமேகாப்பு சதாசிவத்தின் சுடரொளியே தனிப்பதமேகாப்பு
நிகன்றசத்தகாண்டமது
யேழாயிரந்தான் நிகழ்த்தினேன் மூன்றாவது காண்டமிதுதானே
விளக்கவுரை :
2002. தானான காண்டமிது
மூன்றாங்காண்டம் சதுர்யுகத்து வதிசயங்கள் சாற்றலாகும்
கோனான யென்னையர்
காலாங்கிநாதர் கூறினார் திரேதாயுகத்தி னதிசயத்தை
வானான காலாங்கிநாதருக்கு
வயதல்லோ வைந்துரண்டு பத்துமாச்சு
தேனான யென்னையர் குருவாமையர்
திரேதாவினதிசயத்தை செப்பினாரே
விளக்கவுரை :
[ads-post]
2003. செப்பினார்
காலாங்கிகுருவாமையர் சிறந்ததொரு குளிகையதுபூண்டுகொண்டு
ஒப்பமுடன்
கடலேழுஞ்சுத்திவந்து ஓங்குபெற கைலங்கிரிகாணவென்று
மெப்புடனே கைலங்கிரி யாதிபீடம்
மேன்னையுடன் அடிவாரத்தண்டைபக்கம்
கொப்பெனவே குளிகைகொண்டு
இறங்கினாராம் கோடானகோடிமுனி ரிஷிகண்டாரே
விளக்கவுரை :
2004. கண்டவுடன் ரிஷிகளெல்லாம்
ஓடிவந்து நடுகெனவே வதிசயித்துக் காணவந்தார்
தெண்டனிட்டு யடிபணிந்து
தாழ்ந்திட்டாராம் திறமான சித்துதனைக்கண்டபோது
அண்டமுனி ராட்சதன்போல்
சித்தர்கூட்டம் அங்ஙனவே காலாங்கிகுருவைக்கண்டு
விண்டபடி சொரூபமென்ற
சித்துதன்னை விபரமுடன் கேட்டாராம் சித்தர்தாமே
விளக்கவுரை :
2005. தாமான சித்தர்முனி
கேட்கும்போது சதாசிவமுந்திடுக்கிட்டு மனங்கலங்கி
நாமான காலாங்கி குருவாமையர்
நாதாக்கள் சித்துகளைக் காணவென்று
வேமான குளிகைகொண்டு
வந்தேன்சாமி வெகுகாலம் கோடிவரைத் தம்மைக்காண
காமான வார்த்தைக்கு
சந்தோஷித்து கருத்துடனே நல்வார்த்தை யுரைத்திட்டாரே
விளக்கவுரை :